ஆனால் இலாபம் வருகிறதோ இல்லையோ, தங்களுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள விரும்பாத முதலாளிகள் எல்லா காலகட்டத்திலும் தங்களுடைய போனஸ், ஊதிய உயர்வு ஆகியவற்றை சரியாக எடுத்துக்கொண்டே இருந்தார்கள் வங்கியிலிருந்து.
34,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அதே காலகட்டத்தில்தான், அவ்வங்கியின் தலைமை அதிகாரி (ஸ்டீபன் ஹெஸ்டர்) போனசாக மட்டும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றிருக்கிறார்…
2010 இல் வங்கியின் 100 உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் போனசாக எடுத்துக்கொண்டார்கள்.
ஒரு பத்துநாட்களுக்கு முன்புதான், மேலும் 3500 பேரை வீட்டுக்கு அனுப்பும் முடிவினை அவ்வங்கி வெளியிட்டிருக்கிறது. இருந்தாலும் இப்போது மீண்டும் தலைமை அதிகாரி ஸ்டீபன் ஹெஸ்டருக்கு மேலும் பல கோடிகள் போனசாக அறிவித்திருக்கிறது வங்கி.
இவை யாவுமே மக்களின் வரிப்பணமே….
சுருக்கமாகச் சொல்வதானால்…
நிறுவனத்தில் அதிக இலாபம் வருகிறபோது அரசாங்கத்திடம் அந்தச்சலுகை இந்தச்சலுகையென்று (மக்களின் வரிப்பணத்தை) சலுகைகளாகப்பெற்று இலாபத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொள்வதும், நிறுவனத்தில் இழப்பு ஏற்படுகிறபோது அரசாங்கப்பணத்தையே எடுத்து (மக்களின் வரிப்பணத்தை) தங்கள் இலாபத்தை குறையாமல் பார்த்துக்கொள்வதுமே தலையாய கடமையாகக் கார்ப்பரேட்டுகள் கருதுகிறார்கள்….