கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 5?

தான் மட்டுமே உலகை ஆளவேண்டும் என்கிற அமெரிக்காவின் பேரரசுக் கனவு மெல்லமெல்ல தகர்ந்துவருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைப்பு, அவர்களுக்கென தனியான வங்கியினை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கும் திட்டம், இரஷ்யா-சீனா-இந்தியாவின் ஷாங்காய் கார்ப்பரேசன், சீனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி, கட்டப்பஞ்சாயத்து அமைப்பாக இருந்தாலும் சீனாவும் இரஷ்யாவும் சமீப காலத்தில் ஐ.நா.சபையில் செலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நா.சபையில் சில முக்கியமான நேரங்களில் சீனாவும் இரஷ்யாவும் தங்களது வீட்டோவைப் பயன்படுத்தி அமெரிக்காவை முறியடிப்பது, ஐரோப்பாவில் ஜெர்மனியின் மேலாதிக்கம், மெடிட்டரேனியன் நாடுகளோடு தன்னுடைய உறவினை பலப்படுத்திவரும்… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது – 5?

கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 4?

இரஷ்யாவை அமெரிக்கா சுற்றிவளைத்தது எப்படி? வியாபாரத்திற்கும் வாணிபத்திற்கும் மேற்குலகை மட்டும் நம்பியிருக்கமுடியாது என்பதை உணர்ந்த இரஷ்யாவும் ஆசியப்பகுதியிலேயே நண்பர்களைத் தேடியது. அதனாலேயே கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்கும் இரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. பெய்ஜிங்கிற்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான நட்புறவும் வளர்ந்தது.  சோவியத் யூனியன் காலத்திலேயே ஆப்பிரிக்கா மற்றும் கியூபாவிலிருந்து சோவியத் யூனியனை விரட்டியடிக்க வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் மிகமுக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்காக 1976இல் சஃபாரி கிளப் என்றொரு புலானாய்வுத் துறையினை… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது – 4?

கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 3?

நேட்டோவின் பரவல்: டாலர் ஆயிலில் இருந்து பெறவேண்டும் என்கிற புள்ளியில் இரஷ்யாவும் ஜெர்மனியும் இணைந்துவிட்டன. இரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய யூனியனுக்கு எரிவாயுவையும் எரிசக்தியையும் எடுத்துச்செல்ல ஏராளமான குழாய்கள் பூமிக்கடியில் போடப்படப்பட்டன. அதில் பல குழாய் இணைப்புகள் உக்ரைன் வழியாக செல்கின்றன. உக்ரைனில் எதற்காக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன, இரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை மாற்ற அமெரிக்கா எதற்காக முயற்சிக்கிறது என்பதையெல்லாம் இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். இரஷ்யாவுக்கு மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரே நட்பு நாடான சிரியாவின் வழியாகவும் மற்றொரு குழாய் இணைப்புத்திட்டம்… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது – 3?

கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 2?

சோவியத் யூனியன் - ரஷியா - திவால் வரலாறு: கிழக்கு ஜெர்மனியையும் மேற்கு ஜெர்மனியையும் இணைப்பதற்காக, அமெரிக்காவும் நேட்டோவும், ஐ.நா.சபையும் சோவியத் யூனியனின் அதிபராக இருந்த கோர்பச்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஜெர்மனியின் இணைப்பிற்கு சோவியத் யூனியன் சம்மதித்தால், மத்திய ஐரோப்பாவைத் தாண்டி நேட்டோ படைகள் விரிவாக்கப்படமாட்டாது என்று அமெரிக்கா அப்பேச்சுவார்த்தையில் வாக்குறுதி கொடுத்தது. பேச்சுவார்த்தையின் மிகமுக்கிய அம்சமாக இதுவே இருந்தது. ஆனால், கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்தபின்னரும், நேட்டோ படைகள் மத்திய ஐரோப்பாவைத் தாண்டி விரிவாக்கப்பட்டன.… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது – 2?

கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது – 1?

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கத் துவங்கிவிட்டது. இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் பலவிதமாக எழுதியும் பேசியும் அவரவர் தரப்பு கருத்துகளை வெளியிட்டுக்கொண்டும் இருக்கின்றனர்.  போர் சரியா அல்லது தவறா? அமெரிக்கா வில்லனா அல்லது ரஷ்யா வில்லனா? மூன்றாம் உலகப்போர் வருமா வராதா? உக்ரைனின் உள்நாட்டு நிலவரம் என்ன? போன்ற பல்வேறு கேள்விகள் நம் முன் பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. பிப்ரவரி 24ஆம் தேதியன்று அதிகாலை வேளையில் ரஷ்ய அதிபரான புடின் வெளியிட்ட அறிவிப்பு செய்தியில் இருந்து… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது – 1?

கட்டுரை

செப்டம்பர் 12 – கியூபன்5

இன்றைய தினம் வரலாற்றின் மிகமுக்கியமான தினம். 23 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், கியூபாவைச் சேர்ந்த ஐந்து பேரைக் கைது செய்தது அமெரிக்க அரசாங்கம்.  ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டு எண்ணிலடங்கா சித்தரவதைக்கு அமெரிக்க அரசும் நீதித்துறையும் அவர்களை ஆளாக்கின. அவர்கள் ஐவரும் பல்வேறு கொடும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே இரவுபகல் பாராமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். பல கொலைகளைச் செய்த மோசமான சீரியர் கில்லர்களை நடத்துவதைப் போன்று அந்த ஐந்து கியூபர்களும் நடத்தப்பட்டனர். அப்படி என்னதான் தவறு… Continue reading செப்டம்பர் 12 – கியூபன்5

கட்டுரை

எது ஆசிரியர் தினம்?

இதையெல்லாம் சொன்னவர் யார்? "இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டே சாதியாகும்" "சாதி தான் மனிதர்களை சண்டைபோடாமல் அமைதியாக வாழ வைக்கும் அமைப்புமுறை" "இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை போரின் மூலம் ஐரோப்பியர்கள் எதிர்கொண்ட காலத்தில், நாம் தான் சாதி என்கிற அமைப்பு முறையைக் கொண்டு அமைதியாக அப்பிரச்சனையைத் தீர்த்தோம்" "சாதி அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்கினால், அதுவே அன்பையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வழங்கும் சமூகமாக இருக்கும். அதனால் சாதி அமைப்பு முறையில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொண்டு ஒரு சமூகத்தை… Continue reading எது ஆசிரியர் தினம்?

கட்டுரை

கொரோனாவும் தனியார் கல்விநிலைய ஆசிரியர்களும்

இந்த சுரண்டல் அமைப்பு முறையின் காரணமாகவும் அதனோடு கைகோர்த்து வந்திருக்கும் கொரோனாவினாலும் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பது மிகவிரிவாக ஆய்வுசெய்யப்பட வேண்டியது அவசியமாகும். அப்படியான ஒரு பணியினை தோழர் அருண்கண்ணனும் கிஷோர் குமாரும் சிலப்பல தோழர்களின் உதவியுடன் தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நிலையை ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியிருக்கின்றனர். அதுவும் மனதில் தோன்றியதையெல்லாம் வார்த்தைகளால் கோர்த்து எழுதப்பட்ட யூகக்கட்டுரையாக இல்லாமல், தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு, ஆய்வு நடத்தி, தகவல் சேகரித்து அதன்மூலம்… Continue reading கொரோனாவும் தனியார் கல்விநிலைய ஆசிரியர்களும்

கட்டுரை

பெகாசஸ்

கடந்த ஆண்டு இந்தியாவை வேவுபார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து, மக்களின் தனிமனித உரிமை மீது அக்கறை கொண்ட அரசாக தன்னைக் காட்டிக்கொண்டது.   நிற்க..... சந்தேகத்தின் பேரிலேயே இத்தனை சீன செயலிகளை தடை செய்த இந்திய அரசு, உண்மையாக நிரூபிக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் உதவியுடனும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் வைரசின் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனத்தையும் இஸ்ரேல் அரசையும் இந்திய அரசு… Continue reading பெகாசஸ்

கட்டுரை, குழந்தைகள் இலக்கியம்

பப்ஜிமதனும் குட்டிஸ்டோரியும்

பப்ஜி மதன் எத்தனை கோடி சொத்து சேர்த்திருக்கிறான், எத்தனை சொகுசு கார் வைத்திருக்கிறான் என்கிற விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால், அந்த விவகாரத்தில் அதைவிட மிகப்பெரிய சமூகப்பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனைத் தான் நாம் அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பப்ஜி மதனுடைய வீடியோக்களில், அவனுடன் பப்ஜி விளையாடிவர்களிலும், அவனுடைய யூட்யூப் சானலுக்கு பார்வையாளர்களாக இருந்த இலட்சக்கணக்கானவர்களிலும் பெரும்பகுதி சிறுவர்களே என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. 13 இல் இருந்து 18 வயது… Continue reading பப்ஜிமதனும் குட்டிஸ்டோரியும்