சினிமா அறிமுகம்

போராடத் தூண்டும் ‘விட்னஸ்’ – திரைப்பட அறிமுகம்

அரசியல் பேசாத கலையும் இலக்கியமும் எந்தக் காலத்திலும் படைக்கப்பட்டதே இல்லை. கலையும் இலக்கியமும் வெறுமனே பொழுதினைப் போக்குவதற்காகத்தான் என்று சொல்பவர்கள் படைக்கிற அல்லது நுகர்கிற கலைகளையும் இலக்கியத்தையும் உற்றுநோக்கினால், அதிலுமேகூட ஏதோவொரு அரசியல் ஒளிந்திருப்பதைக் காணலாம். எல்லா கலைப்படைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு அரசியலை பேசுகிறதென்றாலும், அவை யாருக்கான அரசியலைப் பேசுகின்றன என்பதில்தான் அவை வேறுபடுகின்றன. மாஸ் மசாலா படங்களுக்குள்ளும் அரசியலைப் பார்க்கமுடியும். ஒரு பிரச்சனையைப் பேசிவிட்டு, அதனைத் தீர்ப்பதற்கு வானில் இருந்து ஒரு நாயகன்… Continue reading போராடத் தூண்டும் ‘விட்னஸ்’ – திரைப்பட அறிமுகம்

சினிமா அறிமுகம்

தமிழ்சினிமாவும் இசுலாமியத்தீவிரவாதமும் பீஸ்ட் திரைப்படமும்…

"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்ல, ஆனா எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்கள் தான்" என்பதை மணிரத்தினத்தின் ரோஜா துவங்கி தமிழ்சினிமாவில் தொடர்கதையாக பலரும் விசமாகக் கக்கிக்கொண்டே தான் இருக்கின்றனர். அதற்கு முன்னரெ ல்லாம் தமிழ்சினிமாக்களில் நாயகருக்கு உதவும் நல்ல நண்பராகவோ நல்ல குடும்பமாகவோ காட்டவேண்டுமென்றால் ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்தைத் தான் காட்டுவார்கள். ஆனால் 1990க்குப் பின்னர் அது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இப்படியான மாற்றம் தமிழ்சினிமாவில் நடந்ததற்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் கொஞ்சமும் தொடர்பில்லை என்று சொல்லிவிடமுடியாது.… Continue reading தமிழ்சினிமாவும் இசுலாமியத்தீவிரவாதமும் பீஸ்ட் திரைப்படமும்…

கட்டுரை, சினிமா அறிமுகம்

மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

சமீபத்தில் “மால்கம் & மேரி” என்றொரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் மொத்தமே இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான். இருவரின் முகத்தைத் தவிர வேறு யாரையும் காட்டமாட்டார்கள். வேறு யாரின் குரலும் ஒலிக்காது. படம் மொத்தமும் ஒரே வீட்டிற்குள் ஒரே இரவில் தான் நடக்கும். ஒருவேளை அதுவொரு குறும்படமோ என்று நினைத்துவிடாதீர்கள். முழுநீளத் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? கருப்பினத்தைச் சேர்ந்த மால்கம் என்பவர் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்பு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.… Continue reading மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

சினிமா அறிமுகம்

ஆப்கன் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' (பகுதி-1)

பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசியும் எழுதியும் வந்த பாகிஸ்தானின் 15 வயது 'மலாலா'வின் மீது, மத அடிப்படைவாத தாலிபான்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம்... யார் இந்த தாலிபான்கள்? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்துவந்திருக்கிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்துகொண்டால், மலாலாவின் இந்த நிலைக்கும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டுப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சனைகளின் வேர்கள் எவை என்றும் நாம் புரிந்துகொள்ளமுடியும்... ஆப்கானின் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' என்கிற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில பகுதிகளை… Continue reading ஆப்கன் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' (பகுதி-1)

சினிமா அறிமுகம்

ஆப்பிரிக்காவின் 'சே' – தாமஸ் சங்கரா (Burkina Faso Film)

மனித இனம் இன்று பல இனங்களாகவும், நாடுகளாகவும் மற்றும் இன்னபிற குழுக்களாகவும் பிரிந்து கிடக்கிறது... இப்படி பல தேசங்களை உருவாக்கி எல்லைக் கோடுகளுக்குள் புகுந்துகொண்டிருக்கும் மனித இனம், முதன்முதலில் தோன்றி வளர்ந்த பூர்வீக பூமியாக இன்றளவும் கருதப்படுவது ஆப்பிரிக்க மண்ணைத்தான்... அந்த ஆப்பிரிக்க மண்ணின் தேசங்கள், பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன... பிரெஞ்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகல், ஜெர்மனி என ஆப்பிரிக்காவை ஆண்டு அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்த மேற்குலக நாடுகளின் எண்ணிக்கை அதிகம்...… Continue reading ஆப்பிரிக்காவின் 'சே' – தாமஸ் சங்கரா (Burkina Faso Film)

சினிமா அறிமுகம்

பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…. (Bread and Tulips – Italian Film)

 1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தினர் சிறுபான்மை டூட்சி மக்களை இனப்படுகொலை செய்த நிகழ்வினை சொல்லும் திரைப்படமான "Shaking hands with the Devil" இல் ஒரு காட்சியில் ஹூட்டு இனத்தை சார்ந்த பெண் பிரதமரிடம் ஐ.நா. தூதுவர் கேட்பார், "நீங்க ஹூட்டுவா? டூட்சியா?" "நான் ஹூட்டு தான்" - அப்பெண் "நெனைச்சேன்" - தூதுவர் "ஹூட்டுவாக இருந்தா என்ன? டூட்சியாக இருந்தா என்ன? பெண்ணாக இருக்கிறேனே! அதைவிடவா பெரிய கொடுமை இருந்துவிடப்போகிறது?… Continue reading பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…. (Bread and Tulips – Italian Film)

சினிமா அறிமுகம்

அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)

'அமெரிக்கா ஒரு சொர்கபுரி' என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும்… Continue reading அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)