சிறுகதை

வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்… (சிறுகதை மாதிரி)

காலையில் கண்விழித்துப் பார்த்தபோது எங்கள் வீட்டைச்சுற்றிலும் எங்களையே குறிவைத்து பளபளப்பான துப்பாக்கிகளை கையிலேந்தி நின்றுகொண்டிருந்தது ஒரு ரவுடிக்கூட்டம். சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தால், அண்டைவீட்டு மக்களெல்லாம் கண்டும்காணாமல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டை சுற்றி வளைத்திருக்கிற ரவுடிகளுக்கு என்னதான் வேண்டுமென்றும் தெரியவில்லை. வீட்டின் வாசலருகே வந்தாலோ அல்லது என்ன? ஏது? என்று விசாரித்தாலோ, ஆயுதங்களால் எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சமிருந்தது. அதனால் வெளியே செல்லமுடியாமல் உள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கொள்ளையர்கள் என்பதும், அதிலும் மிக வித்தியாசமான கொள்ளையர்கள்… Continue reading வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்… (சிறுகதை மாதிரி)

சிறுகதை

வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)

வீட்டிலிருந்து வெளியே செல்ல கிளம்பிய வாசுகி, எதிர்வீட்டைக்கண்டதும் நிமிடமொன்று நின்று அவ்வீட்டையே உற்று நோக்கினாள். காந்தி நகரிலேயே முதன்முதலாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்கிய வீடுதான் அது. அதற்காக இந்த ஊரே, அவ்வீட்டை 'டிவி காரங்க வீடு' என்றும், அவ்வீட்டிலுள்ள மனிதர்களை 'டிவிகாரரு' 'டிவி காரம்மா' 'டிவி காரம்மா பொண்ணு' என்று அழைத்துவருகிறது. 'டிவி பெட்டி கருப்பா? சிவப்பா? வட்டமா? சதுரமா?' என்றெல்லாம் ஆயிரம் குழப்பங்களோடு அவ்வீட்டிற்கு நுழைந்தபோதெல்லாம் கடுஞ்சொற்களின் மூலமாக வாசலோடு விரட்டப்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்காமல் வாசலைத்தாண்டியதில்லை வாசுகி.… Continue reading வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)

சிறுகதை

நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)

நான் நின்றுகொண்டிருக்கும் இத்தெருவிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. ஓசி சோறும், வேலைசெய்யாமலெடுத்த ஓய்வும் என்தொப்பையினை ஒரு சுற்று பெருக்க வைத்திருப்பது உண்மைதான். "வாங்க வெளிய போகலாம்" என்று இழுத்துக்கொண்டே தெருவினைக்கடந்தும் என்கையை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தான், எனக்கு இருப்பிடம் கொடுத்த ராமு. "நாம எங்கப்பா போறோம்?" என்கிற கேள்வியை வழிநெடுக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். சிரிப்பைத்தவிர வேறெதுவும் பதிலாகத்தரவில்லை அவன். ஒவ்வொரு தெருவைத்தாண்டுகிறபோதும் மேலும் சிலர் எங்களுடன் சேர்ந்துநடக்கத்துவங்கியது எனது குழப்பத்தை கூட்டத்தான் செய்தது.… Continue reading நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)

சிறுகதை

5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்… (சிறுகதை)

கோடைவிடுமுறை முடிந்து புதிய வகுப்பில் நுழைந்தபோது, சில புதிய முகங்களும் எனது வகுப்பில் சேரத்துவங்கியிருந்தன. இராகவனும் அப்படிச்சேர்ந்தவந்தான். அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், அன்றே எங்களுடைய நட்புவட்டத்திற்குள் வந்துவிட்டான். "எங்க பழைய ஸ்கூல்ல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணுவேன் தெரியுமா.... பாக்கெட்ல வேர்க்கடலய வெச்சிக்கிட்டு மிஸ்சுக்கே தெரியாம க்ளாஸ்லையே சாப்புடுவேன்... ஆபிஸ் ரூம்ல இருந்து நாலு சாக்பீஸ் கேட்டுவாங்கிட்டு வந்து அதுல ரெண்டதான் எங்க மிஸ்கிட்ட குடுப்பேன். மீதிய நான் பாக்கெட்ல போட்டுப்பேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வேலை… Continue reading 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்… (சிறுகதை)

சிறுகதை

ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)

1) ஞாயிற்றுக்கிழமை காலை! டீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். "ஒரு டீ போடுங்கண்ணே" ஜீவாவின் குரலைக்கேட்டு 'எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே' என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார். "ஒன்னும் இல்லண்ணே. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.  தனியா வெறுப்பா இருந்திச்சி... அதான் வந்தேன்..." பேப்பர் ஏதும் கிடைக்காமல் ஒருவரின் பக்கத்திலமர்ந்து பேப்பரை பங்குபோட்டு படித்தான். வரிக்கு வரி விவாதம் நடந்துகொண்டிருந்ததை பார்ப்பதற்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது… Continue reading ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)