"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு?" என்கிற வாக்கியத்தில் அடுப்பு ஊதுவது வேண்டுமானால் பழமை ஆகியிருக்கலாம். ஆனால் "பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்கிற வாக்கியம் இன்னமும் கொஞ்சமேனும் நம் சமூகத்தில் ஒட்டிக்கொண்டு உலவிக்கொண்டு தான் இருக்கிறது. படிப்பதற்கோ பணி செய்வதற்கோ வீட்டு வாசப்படியைப் பெண்கள் தாண்டிவிடக்கூடாது என்கிற கருத்தைக் கொண்டவர்கள் இன்றைக்கும் ஏராளமாக இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படியே படிக்க அனுப்பினாலும் "கல்யாண வயது வரும்வரைக்கும் படிக்கட்டும்" என்று அனுப்பும் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. 18-20 வயது ஆனதும் வரன் பார்க்கத்… Continue reading சுல்தானாவின் கனவு – ஒரு அசத்தலான அறிவியல் புனைவு ஃபேண்டசிக் கதை
Category: நூல் அறிமுகம்
கயிறு – நூல் அறிமுகம்
12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு, இந்நூலை வெளியிட்டிருக்கிறது. கதையைப் பற்றி ஏதாவது ஒரேயொரு வரியை எழுதினால் கூட கதையைச் சொல்வதாகிவிடும். அதனால் அதனைச் சொல்லாமல் தாண்டிச் சென்று இந்நூலை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன். 12 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கான கதைகளில் அதிகமான ஃபேன்டசி இருக்கும். மனிதர்களின் உறவு சார்ந்த… Continue reading கயிறு – நூல் அறிமுகம்
பச்சை வைரம் – நூல் அறிமுகம்
பாரதி புத்தகாலயத்தினுடைய புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகத்துக்கு நாமெல்லாம் பெரியளவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். சமூக அக்கறை மிகுந்த சிறுவர் கதைளை வெளியிடுவதில் தமிழ்ச்சமூகத்தில் அவர்களுடைய பங்கு மிகமிக முக்கியமானதாகும். இந்த நூலின் துவக்கத்திலேயே இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நூல் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியமான வயசு என்று நினைக்கிறேன். அதற்குக் கீழுள்ள வயதுடைய குழந்தைகளுக்கு ஃபாண்டசியா நிறைய கதைகளை சொல்கிறோம். குறிப்பாக மனிதர்களுடைய தன்மைகளை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது 12 வயதுக்கு… Continue reading பச்சை வைரம் – நூல் அறிமுகம்
வானவில் – நூல் அறிமுகம்
சிறுவர் இலக்கியத்தில் மிகமிக முக்கியமானதும் அவசியமானதுமாக இருப்பது சிறுவர் பாடல்கள் என்பேன். கதைகளைக் கேட்பதற்கு முன்பே, பாடல்கள் வழியாக பலவற்றைத் தெரிந்துகொள்ளவே குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது துவங்கி, பள்ளிக்கு செல்லும் வயதுவரையிலும் அக்குழந்தைக்கு ஏதாவது பாடலை வீட்டிலிருப்பவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அது இப்போதெல்லாம் மிகமிகக் குறைந்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த தொலைக்காட்சிகளும் யூட்யூப்களும் வந்துவிட்ட காலத்தில், ரைம்ஸ் எல்லாம் அதன்வழியாகத் தான் பாடப்படுகின்றன. அப்பாடல்களில் அனிமேசனுக்கும் அதில் காண்பிக்கப்படும் பொருட்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமெல்லாம்… Continue reading வானவில் – நூல் அறிமுகம்
வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்
இந்நூலைப் படித்துமுடித்ததில் இருந்தே வருத்தமும் கோபமும் குழப்பமும் ஆத்திரமும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. அந்த 180 பக்க நூலின் மொத்த சாராம்சமே, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இன்றைய நவீன மருத்துவம் மட்டும் தான் முட்டாள்தனம்” என்று சொல்வது தான். அதாவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் இருக்கிற பிரசவ வார்டுகள் மொத்தத்தையும் இடித்துத் தள்ளிவிட்டு, பிரசவம் பார்க்கிற மருத்துவர்கள் அனைவரையும் வேறெதாவது வேலைக்கு அனுப்பவேண்டும் என்பது தான் அந்த நூலின் விருப்பமும் ஆசையும் தீர்மானமும்.… Continue reading வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்
‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))
மக்களின் வாழ்க்கையை உள்வாங்கி, ஒவ்வொரு கலைஞனும் தன் அளவிலான எதிர்வினையை கலையாகவும், இலக்கியமாகவும், படைப்புக்களாகவும் வெளிப்படுத்துகிறான். ரசிகர், விமர்சகர் என ஒவ்வொருவரிடமும் அந்த கலைப்படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விமர்சகர்களும், ரசிகர்களும் தங்கள் அனுபவங்களோடு படைப்பை உரசிப் பார்த்தேன் உள்வாங்குகின்றனர். சினிமாக்களின் ஊடாக பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களை தரிசித்து நமக்கு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார், இ.பா.சிந்தன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக உள்ள அவர், ஏற்கனவே அரசியல் பேசும் அயல் சினிமா… Continue reading ‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))