பப்ஜி மதன் எத்தனை கோடி சொத்து சேர்த்திருக்கிறான், எத்தனை சொகுசு கார் வைத்திருக்கிறான் என்கிற விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால், அந்த விவகாரத்தில் அதைவிட மிகப்பெரிய சமூகப்பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனைத் தான் நாம் அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பப்ஜி மதனுடைய வீடியோக்களில், அவனுடன் பப்ஜி விளையாடிவர்களிலும், அவனுடைய யூட்யூப் சானலுக்கு பார்வையாளர்களாக இருந்த இலட்சக்கணக்கானவர்களிலும் பெரும்பகுதி சிறுவர்களே என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. 13 இல் இருந்து 18 வயது… Continue reading பப்ஜிமதனும் குட்டிஸ்டோரியும்
Tag: ஆன்லைன் ஆபத்து
சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…
சிறுவர் இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். சிறுவர் இலக்கியத்தில் உலகளாவிய சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அதனை நிகழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சூழலில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். சிறுவர் இலக்கியத்திற்காக ஏதோவொரு வகையில் உழைக்கும் ஏறத்தாழ முன்னூறு பேர் ஜூம் வழியாக ஒரே நேரத்தில் இணைந்து உருவாக்கிய சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கலாம். அதே போல, சிறுவர் இலக்கியத்தில் ஆண்களின்… Continue reading சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…