கட்டுரை

இந்துத்துவ வதந்திகளை உடைக்கும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் கைது…

ஒவ்வொரு நாளும் வருகிற செய்திகள் கவலையளிப்பதாகவும் அச்சமூட்டுவதாகவுமே இருக்கின்றன. தன்னுடைய ஐடி பிரிவைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை உருவாக்கி, அவற்றை உண்மை போலவே வாட்சப், பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களில் பரப்பியபடியே மக்களின் மனதில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சிக்கட்டிலில் தொடர்ந்து அமர்ந்துகொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதனை எதிர்த்து நாம் ஆங்காங்கே குரல் கொடுத்தாலும், இந்துத்துவ கும்பல்கள் பரப்புகிற ஒவ்வொரு வதந்தியையும் போலிச்செய்தியையும் ஆய்வுசெய்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் வெளியிடுவது காலத்திற்கு நிற்கக்கூடிய ஆவணமாக மாறும்.… Continue reading இந்துத்துவ வதந்திகளை உடைக்கும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் கைது…

கட்டுரை

‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை

கல்லூரிக் காலத்தில் ஒரு கவிதை நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன். எப்போது எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதில் எழுதிவிடுவேன். அந்தக் கவிதைகளெல்லாம் பலவிதங்களிலும் பலபேருக்கும் பலகாலகட்டத்தில் பயன்பட்டிருக்கின்றன. இணையத்தில் பிளாக் என்கிற ஒன்று வந்தபிறகு, நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை பிளாகில் எழுதத் துவங்கினேன். கவிதைகளைத் தாண்டி கதைகளையும் அவ்வப்போது எழுதிப் பார்த்தேன். பின்னர் அதுவே மெல்ல திரைப்படங்கள் குறித்து எழுத ஆரம்பித்தேன். அதிலும் அரசியல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் அரசியலையும், அதற்குப் பின்னிருக்கும் வரலாற்று உண்மைகளையும்… Continue reading ‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை