கட்டுரை

வெல்லமுடியாத கட்சியா பாஜக?

  இந்தியாவைப் பொறுத்தவரையில் தேர்தல் வெற்றி தோல்விகளை ஆய்வுசெய்யும் போது நாம் தவறு செய்யும் ஓரிடம் எது தெரியுமா? ஒட்டுமொத்தமாக எத்தனை தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்று பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறோம். தேர்தல் வெற்றி தோல்வியைக் கணக்கிடுவதற்கு இது போதுமானதாக இருக்கும். ஆனால் தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள், யாருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள், யாரெல்ல்லாம் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் பெரும்பாலும் ஆய்வு செய்வதே இல்லை.… Continue reading வெல்லமுடியாத கட்சியா பாஜக?

கட்டுரை

தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்கும் விதவிதமான வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். ஒரேமாதிரியான திட்டத்தோடோ, ஒரேமாதிரியான வியூகத்துடனோ பாஜக தேர்தலை எதிர்கொள்வதே இல்லை. ஒரே நாடு, ஒரே ரோடு என்றெல்லாம் தேசம் முழுவதும் பேசுவது போன்று தெரிந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலமும் தனி நாடும் கேட்கிற கட்சிகளோடு கைகோர்த்துக்கொண்டு ஒரே நாடு கோரிக்கையை பேசாமல் இருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்தே கொல்லும் உத்தரப்பிரதேசத்தில் அப்படியாக கொலை செய்பவர்களின் கருத்தியலை ஆதரிக்கும் அதே பாஜக, கேரளாவுக்கு வந்தால்… Continue reading தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

கட்டுரை

ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிற அதேவேளையில் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இம்முறையும் பாஜக சார்பாக பொன் இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வென்றால் அமைச்சராவார், அவர் வென்றால் பாலம் கட்டுவார் என்றெல்லாம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில உண்மைத் தகவல்களை நாம் இந்த நேரத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒரு பாராளுமன்ற எம்பியின் மிக முக்கியமான பணி என்ன தெரியுமா? சாலையில் சில விளக்குகளை அமைப்பதோ, சில தெருக்களுக்கு சாலை போடுவதோ அல்ல. நம்முடைய… Continue reading ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

கட்டுரை

தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

சச்சின் டெண்டுல்கரெல்லாம் தேசபக்தியைப் பற்றியும், அடுத்த நாட்டுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு சொல்வதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை. உலகிலேயே அதிகமான நாடுகளின் பிரச்சனைகளில் ஒட்டுக்கேட்பதையும் மூக்கைநுழைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் யாரென்றால், பல வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தான். ஐரோப்பாவில் இருக்கிற ஒருநாட்டில் உளவுபார்ப்பதற்காகவே, ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அத்தகைய இந்துத்துவா அமைப்பொன்றின் ஐரோப்பிய பிரிவில் வேலைபார்க்கும் ஒருவனை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அவனுடன் சில மாதங்கள் தொடர்ந்து உரையாடியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. இங்கிலாந்தில் வாழும்… Continue reading தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

கட்டுரை

பாஜகவின் உண்மை முகம்

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும். பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது. 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், அரசு… Continue reading பாஜகவின் உண்மை முகம்