உக்ரைனுக்கு வெளியில் இருந்து என்னென்ன காரணங்கள் எல்லாம் இப்போருக்கு இருந்து வந்திருக்கின்றன என்பதைக் கடந்த சில பகுதிகளில் பார்த்தோம். இனி உக்ரைனுக்கு உள்ளே யார் யாரெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்த்துவிடுவது பிரச்சனையை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன்... இன்றைக்கு நாம் பார்க்கிற உக்ரைன் என்பது, உலகின் பல நாடுகளைப் போல பல நூற்றாண்டுகளாக அதே வடிவில் இருக்கவில்லை. 1922இல் லெனினாலும், 1939 மற்றும் 1945 ஆம் ஆண்டுகளில் ஸ்டாலினாலும், 1954இல் குருசேவினாலும் சிலப்பல… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 7