‘அரசியல் பேசும் அயல்சினிமா’ மற்றும் ‘பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும்’ என இரண்டு நேரடி நூல்களை எழுதியிருக்கிறேன். அவற்றை பாரதி புத்தகாலயம் பதிப்பித்திருக்கிறது. ‘நிழல் இராணுவங்கள்’, ‘இந்தியா ஏமாற்றப்படுகிறது’, ‘இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?’ மற்றும் ‘ஆன்மிக அரசியல்’ ஆகிய என்னுடைய நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை எதிர்வெளியீடு வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை ‘நிழல் இராணுவங்கள்’ நூல் பெற்றிருக்கிறது. ‘பணமதிப்பிழப்பு – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு‘ என்கிற குறுநூல் கிண்டிலில் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஜானகி அம்மாள் – இந்தியாவின் கரும்புப் பெண்மணி‘ என்கிற 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான நூலும் கிண்டிலில் வெளியாகியிருக்கிறது.
மேலும், குட்டிஸ்டோரி என்கிற யூட்யூப் சானலைத் நிர்வகித்து வருகிறேன். இதில் எனது குடும்பத்துடன் (மனைவி – தீபா, மகள் – யாநிலா) இணைந்து குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி வருகிறேன்.