சினிமா அறிமுகம்

போராடத் தூண்டும் ‘விட்னஸ்’ – திரைப்பட அறிமுகம்

அரசியல் பேசாத கலையும் இலக்கியமும் எந்தக் காலத்திலும் படைக்கப்பட்டதே இல்லை. கலையும் இலக்கியமும் வெறுமனே பொழுதினைப் போக்குவதற்காகத்தான் என்று சொல்பவர்கள் படைக்கிற அல்லது நுகர்கிற கலைகளையும் இலக்கியத்தையும் உற்றுநோக்கினால், அதிலுமேகூட ஏதோவொரு அரசியல் ஒளிந்திருப்பதைக் காணலாம். எல்லா கலைப்படைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோவொரு அரசியலை பேசுகிறதென்றாலும், அவை யாருக்கான அரசியலைப் பேசுகின்றன என்பதில்தான் அவை வேறுபடுகின்றன. மாஸ் மசாலா படங்களுக்குள்ளும் அரசியலைப் பார்க்கமுடியும். ஒரு பிரச்சனையைப் பேசிவிட்டு, அதனைத் தீர்ப்பதற்கு வானில் இருந்து ஒரு நாயகன்… Continue reading போராடத் தூண்டும் ‘விட்னஸ்’ – திரைப்பட அறிமுகம்

குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

சுல்தானாவின் கனவு – ஒரு அசத்தலான அறிவியல் புனைவு ஃபேண்டசிக் கதை

"அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதற்கு?" என்கிற வாக்கியத்தில் அடுப்பு ஊதுவது வேண்டுமானால் பழமை ஆகியிருக்கலாம். ஆனால் "பெண்களுக்குப் படிப்பெதற்கு?" என்கிற வாக்கியம் இன்னமும் கொஞ்சமேனும் நம் சமூகத்தில் ஒட்டிக்கொண்டு உலவிக்கொண்டு தான் இருக்கிறது. படிப்பதற்கோ பணி செய்வதற்கோ வீட்டு வாசப்படியைப் பெண்கள் தாண்டிவிடக்கூடாது என்கிற கருத்தைக் கொண்டவர்கள் இன்றைக்கும் ஏராளமாக இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படியே படிக்க அனுப்பினாலும் "கல்யாண வயது வரும்வரைக்கும் படிக்கட்டும்" என்று அனுப்பும் குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. 18-20 வயது ஆனதும் வரன் பார்க்கத்… Continue reading சுல்தானாவின் கனவு – ஒரு அசத்தலான அறிவியல் புனைவு ஃபேண்டசிக் கதை

கட்டுரை

நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?

முன்னறிவிப்பு:  இது ஆர்ட்டிகிள்-15 மற்றும் நெஞ்சுக்கு நீதி திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை தான் என்றாலும் கூட, திரைப்பட விமர்சனம் இல்லை என்பதையும், அத்திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட கதைக்குப் பின்னிருக்கும் உண்மைச் சம்பவத்தைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதையும் முன்னறிவிப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்ட்டிக்கிள்-15 படத்தின் கதை உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் சுவாரசியத்திற்காக சமீபத்தில் நடந்த வேறு சில அரசியல் நிகழ்வுகளையும் இணைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படம் சரியான அரசியலைப் பேசுகிறதா இல்லையா என்கிற… Continue reading நெஞ்சுக்கு நீதியும் ஆர்ட்டிக்கிள் 15உம் – யார் உண்மையான நாயகர்கள்?

கட்டுரை

யார் பூமர்?

சமீபத்தில் மிக அதிகமாக சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தையான பூமர் என்பதை தவறாகப் பயன்படுத்துகிறோமோ என்கிற அச்சம் மேலெழுகிறது. ஒரு வார்த்தையின் உண்மையான பொருளில் இருந்து விலகுவது மிகப்பெரிய ஆபத்தில் தான் முடியும். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் உலகில் நிலவிய போரற்ற ஒரு திடீர் அமைதியின் காரணமாக உலகெங்கிலும் அதிகமான குழந்தைகள் பிறக்கத்துவங்கியது. நிலையான அரசுகளும் அப்போதுதான் அமைய ஆரம்பித்த காரணத்தினால் அவர்களுக்கு முதன்முதலாக அறிவியல்ரீதியாக முறையான மருத்துவமும் கிடைக்கத் துவங்கியது. இரண்டாம் உலகப் போருக்கு… Continue reading யார் பூமர்?

கட்டுரை

கும்பல் படுகொலை என்றால் என்ன?

கட்டுரையைத் துவங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய பட்டியலைப் பார்த்துவிடுவோம். ஜூன் 2021 காஷ்மீர் Aijaz Dar ஜூன் 2021 இராஜஸ்தான் Babu Bheel  ஜூன் 2021 அசாம் Sarat Moran ஜூன் 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shera மே 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shakir ஜூன் 2020 கர்நாடகா Mohammed Hanif செப்டம்பர் 2019 மேற்குவங்கம் Kabir Sheikh ஜூலை 2019 மேற்குவங்கம் Faiz ஜூன் 2019 ஜார்கண்ட் Tabrez Ansari டிசம்பர் 2018 பீகார் Mohammed… Continue reading கும்பல் படுகொலை என்றால் என்ன?

கட்டுரை

இந்துத்துவ வதந்திகளை உடைக்கும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் கைது…

ஒவ்வொரு நாளும் வருகிற செய்திகள் கவலையளிப்பதாகவும் அச்சமூட்டுவதாகவுமே இருக்கின்றன. தன்னுடைய ஐடி பிரிவைப் பயன்படுத்தி பொய்யான செய்திகளை உருவாக்கி, அவற்றை உண்மை போலவே வாட்சப், பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமூக ஊடகங்களில் பரப்பியபடியே மக்களின் மனதில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சிக்கட்டிலில் தொடர்ந்து அமர்ந்துகொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதனை எதிர்த்து நாம் ஆங்காங்கே குரல் கொடுத்தாலும், இந்துத்துவ கும்பல்கள் பரப்புகிற ஒவ்வொரு வதந்தியையும் போலிச்செய்தியையும் ஆய்வுசெய்து, அவற்றின் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் வெளியிடுவது காலத்திற்கு நிற்கக்கூடிய ஆவணமாக மாறும்.… Continue reading இந்துத்துவ வதந்திகளை உடைக்கும் ஆல்ட் நியூஸ் நிறுவனர் கைது…

கட்டுரை

புல்டோசர் – இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் அஃப்ரீன் ஃபாத்திமா என்கிற மாணவியின் வீட்டை காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. வீட்டை இடித்ததற்கான காரணம் என்ன? ஒருபுறம், அந்த வீடு சட்டவிதிகளுக்கு மீறி கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடித்ததாக அலகாபாத் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. மற்றொருபுறம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தைல் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிற அஃப்ரீன் ஃபாத்திமா, அங்கு மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டதாலும் மாணவர் அமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதாலும் தான் அவரைக் குறிவைத்து அவரது வீட்டை… Continue reading புல்டோசர் – இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்

கட்டுரை

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்

உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை. அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் தூக்கலாம். ஆக கைது, விசாரணை, வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு, நீதி, நியாயம் எதுவுமே தேவைப்படாமல் அதிகாரம் படைத்த எவரும் துப்பாக்கியை எடுத்து அவரவருக்கான (அ)நியாயத்தைப்… Continue reading அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்

கட்டுரை

பேரறிவாளன் விடுதலை ❤️❤️❤️

31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இன்றைக்கு முழுமையாக விடுதலையாகி இருக்கிறார் பேரறிவாளன். இந்த 31 ஆண்டுகால வரலாற்றை உற்றுநோக்கினால் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் அறம்சார்ந்தும் சமூகமாக நாம் எங்கெல்லாம் நம்மை சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவே இன்னொரு பேரறிவாளனை இத்தனை ஆண்டுகள் சிறையில் நீண்டகாலமாக உள்ளே தள்ளுவதையும், அவரை மீட்டுக்கொண்டுவருவதற்கு இன்னொரு நீண்டநெடிய போராட்டத்தை மேற்கொள்ளவேண்டி இருப்பதையும் தடுக்கும். பேரறிவாளனின் இடத்தில் வேறொரு மெகா கோடீஸ்வரரின் மகன் கைது செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக… Continue reading பேரறிவாளன் விடுதலை ❤️❤️❤️

கட்டுரை

‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை

கல்லூரிக் காலத்தில் ஒரு கவிதை நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன். எப்போது எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதில் எழுதிவிடுவேன். அந்தக் கவிதைகளெல்லாம் பலவிதங்களிலும் பலபேருக்கும் பலகாலகட்டத்தில் பயன்பட்டிருக்கின்றன. இணையத்தில் பிளாக் என்கிற ஒன்று வந்தபிறகு, நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை பிளாகில் எழுதத் துவங்கினேன். கவிதைகளைத் தாண்டி கதைகளையும் அவ்வப்போது எழுதிப் பார்த்தேன். பின்னர் அதுவே மெல்ல திரைப்படங்கள் குறித்து எழுத ஆரம்பித்தேன். அதிலும் அரசியல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் அரசியலையும், அதற்குப் பின்னிருக்கும் வரலாற்று உண்மைகளையும்… Continue reading ‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை