கட்டுரை

கும்பல் படுகொலை என்றால் என்ன?

கட்டுரையைத் துவங்குவதற்கு முன்னர் ஒரு சிறிய பட்டியலைப் பார்த்துவிடுவோம். ஜூன் 2021 காஷ்மீர் Aijaz Dar ஜூன் 2021 இராஜஸ்தான் Babu Bheel  ஜூன் 2021 அசாம் Sarat Moran ஜூன் 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shera மே 2021 உத்தரப்பிரதேசம் Mohammad Shakir ஜூன் 2020 கர்நாடகா Mohammed Hanif செப்டம்பர் 2019 மேற்குவங்கம் Kabir Sheikh ஜூலை 2019 மேற்குவங்கம் Faiz ஜூன் 2019 ஜார்கண்ட் Tabrez Ansari டிசம்பர் 2018 பீகார் Mohammed… Continue reading கும்பல் படுகொலை என்றால் என்ன?

கட்டுரை

புல்டோசர் – இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரில் அஃப்ரீன் ஃபாத்திமா என்கிற மாணவியின் வீட்டை காவல்துறை ஞாயிற்றுக்கிழமையன்று இடித்துத் தரைமட்டமாக்கி இருக்கிறது. வீட்டை இடித்ததற்கான காரணம் என்ன? ஒருபுறம், அந்த வீடு சட்டவிதிகளுக்கு மீறி கட்டப்பட்டிருப்பதாகக் கூறி அதனை இடித்ததாக அலகாபாத் அரசு நிர்வாகம் தெரிவிக்கிறது. மற்றொருபுறம், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழத்தைல் ஆராய்ச்சி மாணவியாக இருக்கிற அஃப்ரீன் ஃபாத்திமா, அங்கு மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டதாலும் மாணவர் அமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பதாலும் தான் அவரைக் குறிவைத்து அவரது வீட்டை… Continue reading புல்டோசர் – இந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்

கட்டுரை

பெகாசஸ்

கடந்த ஆண்டு இந்தியாவை வேவுபார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து, மக்களின் தனிமனித உரிமை மீது அக்கறை கொண்ட அரசாக தன்னைக் காட்டிக்கொண்டது.   நிற்க..... சந்தேகத்தின் பேரிலேயே இத்தனை சீன செயலிகளை தடை செய்த இந்திய அரசு, உண்மையாக நிரூபிக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் உதவியுடனும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் வைரசின் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனத்தையும் இஸ்ரேல் அரசையும் இந்திய அரசு… Continue reading பெகாசஸ்

கட்டுரை

மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

மேற்குவங்கத்தில் சிபிம் ஆட்சியில் இருந்தபோது நந்திகிராமில் மக்களுக்கு எதிராக காவல்துறை அட்டூழியம் நிகழ்த்தியதாக மாநிலம் முழுவதும் செய்திபரப்பி ஆட்சிக்கு வந்தவர் மம்தா. அன்றைய சிபிம் ஆட்சிக்கு எதிராக இந்த ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டுமே மக்கள் முன்பு வைத்து, ஓட்டுக்களாக மாற்றி மம்தா முதல்வரானார். நந்திகிராமில் சிபிம் க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்த சுவேந்து அதிகாரி என்பவர், பின்னர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இத்தனை வருடங்களாக மம்தாவின் கட்சியில் இருந்த அவர், தற்போது… Continue reading மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

கட்டுரை

தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்கும் விதவிதமான வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். ஒரேமாதிரியான திட்டத்தோடோ, ஒரேமாதிரியான வியூகத்துடனோ பாஜக தேர்தலை எதிர்கொள்வதே இல்லை. ஒரே நாடு, ஒரே ரோடு என்றெல்லாம் தேசம் முழுவதும் பேசுவது போன்று தெரிந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலமும் தனி நாடும் கேட்கிற கட்சிகளோடு கைகோர்த்துக்கொண்டு ஒரே நாடு கோரிக்கையை பேசாமல் இருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்தே கொல்லும் உத்தரப்பிரதேசத்தில் அப்படியாக கொலை செய்பவர்களின் கருத்தியலை ஆதரிக்கும் அதே பாஜக, கேரளாவுக்கு வந்தால்… Continue reading தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

கட்டுரை

ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிற அதேவேளையில் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இம்முறையும் பாஜக சார்பாக பொன் இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வென்றால் அமைச்சராவார், அவர் வென்றால் பாலம் கட்டுவார் என்றெல்லாம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில உண்மைத் தகவல்களை நாம் இந்த நேரத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒரு பாராளுமன்ற எம்பியின் மிக முக்கியமான பணி என்ன தெரியுமா? சாலையில் சில விளக்குகளை அமைப்பதோ, சில தெருக்களுக்கு சாலை போடுவதோ அல்ல. நம்முடைய… Continue reading ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

கட்டுரை

தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

சச்சின் டெண்டுல்கரெல்லாம் தேசபக்தியைப் பற்றியும், அடுத்த நாட்டுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு சொல்வதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை. உலகிலேயே அதிகமான நாடுகளின் பிரச்சனைகளில் ஒட்டுக்கேட்பதையும் மூக்கைநுழைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் யாரென்றால், பல வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தான். ஐரோப்பாவில் இருக்கிற ஒருநாட்டில் உளவுபார்ப்பதற்காகவே, ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அத்தகைய இந்துத்துவா அமைப்பொன்றின் ஐரோப்பிய பிரிவில் வேலைபார்க்கும் ஒருவனை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அவனுடன் சில மாதங்கள் தொடர்ந்து உரையாடியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. இங்கிலாந்தில் வாழும்… Continue reading தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

கட்டுரை

பாஜகவின் உண்மை முகம்

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும். பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது. 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், அரசு… Continue reading பாஜகவின் உண்மை முகம்