மேற்குவங்கத்தில் சிபிம் ஆட்சியில் இருந்தபோது நந்திகிராமில் மக்களுக்கு எதிராக காவல்துறை அட்டூழியம் நிகழ்த்தியதாக மாநிலம் முழுவதும் செய்திபரப்பி ஆட்சிக்கு வந்தவர் மம்தா.
அன்றைய சிபிம் ஆட்சிக்கு எதிராக இந்த ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டுமே மக்கள் முன்பு வைத்து, ஓட்டுக்களாக மாற்றி மம்தா முதல்வரானார். நந்திகிராமில் சிபிம் க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்த சுவேந்து அதிகாரி என்பவர், பின்னர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இத்தனை வருடங்களாக மம்தாவின் கட்சியில் இருந்த அவர், தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். இப்போது தான ஒருவருக்கு ஒருவர் எதிராக பழைய குப்பைகளை எல்லஅம் கிளற ஆரம்பித்திருக்கின்றனர்.
“நந்திகிராமில் நீ எப்படி கலவரத்தை நடத்தினாய் என்பது எனக்குத் தெரியும்” என்று ஒருவரும்,
“காவல்துறையில் சில அதிகாரிகளை விலைக்கு வாங்கி, துப்பாக்கிசூட்டை நீ எப்படி நடத்தினாய் என்பது எனக்குத் தெரியாதா” என்று இன்னொருவரும் மாற்றி மாற்றி பழைய உண்மைகளை வெளியே சொல்கின்றனர்.
ஆக, இடதுசாரிகளின் ஆட்சியை நேர்மையாகத் தோற்கடிக்கமுடியாமல், திருட்டுத்தனமாக இன்றைய பாஜக தலைவர்களும் மம்தா கட்சியும் அன்றைக்கு கைகோர்த்து நடத்திய மெகா நாடகம் இப்போது மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த கேடுகெட்ட கூட்டணியில் அன்றைக்கு மாவோயிஸ்ட்டுகளும் இருந்தனர் என்பதையும் இங்கே அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
இந்த உண்மைகள் எல்லாம் காலம் கடந்து வெளியாகியிருக்கிறது. அதற்குள் இடதுசாரிகளுக்கு மிகப்பெரிய இழப்பை அங்கே கையளித்துவிட்டது. மம்தாவின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான தோழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இடதுசாரிகளின் மக்கள் வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால், இம்முறை பத்து இடங்களை இடதுசாரிகள் வெல்வதே கடினமானதாகத் தான் இருக்கப்போகிறது. மேற்குவங்க அரசியலே மம்தா vs பாஜக என்றாகிப்போய்விட்டது.
மேற்குவங்கம் எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வரவேண்டும். பாஜக என்கிற ஆர்எஸ்எஸ் இன் ஏ டீமும், திரிணாமுல் காங்கிரஸ் என்கிற பாஜகவின் பீ டீமும் தோற்கடிக்கப்பட வேண்டும். அது இன்று இல்லையென்றாலும் என்றாவது நடந்தாக வேண்டும் என்பது அவசியம்…