இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை மிகப்பெரிய கவலையைத் தருகிறது. நமக்கு அருகாமையிலேயே ஒரு தேசம் இப்படியான நிலைமைக்கு வந்துசேர்ந்திருப்பது வருத்தமும் கோபமும் கலந்த ஒரு மனநிலைக்குக் கொண்டு சேர்க்கிறது. எந்த நாட்டில், எந்த காலகட்டத்தில், எந்த காரணத்திற்காக, யாருடன் யார் போர் புரிந்தாலும், அது உழைக்கும் வர்க்கத்திற்கான இழப்பு தான். போரினால் ஏற்படும் துயரங்களையும் துன்பங்களையும் இழப்புகளையும் தலையில் தூக்கி சுமக்க வேண்டிய கட்டாயத்திற்கு உழைக்கும் மக்கள் தான் தள்ளப்படுவார்கள். உலகின் ஒரு பகுதியில் போர்… Continue reading இலங்கை நெருக்கடி – போர் எப்போதும் உழைக்கும் வர்க்கத்தின் எதிரி
Month: March 2022
உக்ரைனில் என்ன நடக்குது? – 13
நவீன இனவெறி அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும்: சோவியத் யூனியன் காலத்தில் பெரிதாக வாலாட்டமுடியாமல் தவித்த உக்ரைனிய அதிதீவிர வலதுசாரிகள், சோவியத் வீழ்ச்சியடைந்ததுமே, 1991இல் உக்ரைனிய சமூக தேசியக் கட்சியை உருவாக்கினர். சோவியத்தில் இருந்து விடுபட்ட பின்னர் கிடைத்த சுதந்திரத்தின் காரணமாக, வெளிப்படையாகவே இனவெறிக்கருத்துகளை அக்கட்சி பேசியது. ஹிட்லரைன் நாஜிப்படைகள் பயன்படுத்திய குறியீடுகளை அக்கட்சி பயன்படுத்தியது. 1999 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகவே ‘பேட்ரியாட் ஆஃப் உக்ரைன்’ என்கிற பெயரில் ஒரு ஆயுதந்தாங்கிய படையினை அக்கட்சி உருவாக்கியது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 13
உக்ரைனில் என்ன நடக்குது? – 12
உக்ரைனிய வலதுசாரிகளின் கொள்கைகள் எங்கிருந்து பெறப்பட்டன? இன்றைய உக்ரைனிய வலதுசாரி அமைப்புகளில் 10 மற்றும் 44 ஆகிய எண்கள் நிச்சமாக ஏதாவதொரு அடையாளங்களில் இடம்பெறுவதைப் பார்க்க முடியும். அது கொடியாக இருக்கலாம், அல்லது கட்சி அலுவலக எண்ணாக இருக்கலாம், அல்லது அடையாள அட்டையாக இருக்கலாம். 1929 ஆம் ஆண்டில் ஓயூஎன் அமைப்பு உருவாக்கப்பட்டபோது பத்து முக்கியமான கொள்கைகளாக வரையறுக்கப்பட்டதல்லாவா. அதனைக் குறிக்கும்விதமாக 10 என்கிற எண் பயன்படுத்தப்படுகிறது. அதே போல, ஒரு சுத்தமாக அக்மார்க் வெள்ளையின… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 12
வெல்லமுடியாத கட்சியா பாஜக?
இந்தியாவைப் பொறுத்தவரையில் தேர்தல் வெற்றி தோல்விகளை ஆய்வுசெய்யும் போது நாம் தவறு செய்யும் ஓரிடம் எது தெரியுமா? ஒட்டுமொத்தமாக எத்தனை தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்று பார்ப்பதோடு நிறுத்திவிடுகிறோம். தேர்தல் வெற்றி தோல்வியைக் கணக்கிடுவதற்கு இது போதுமானதாக இருக்கும். ஆனால் தேர்தலில் மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள், யாருக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள், யாரெல்ல்லாம் கூட்டணி அமைத்திருந்தால் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கையில் என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் பெரும்பாலும் ஆய்வு செய்வதே இல்லை.… Continue reading வெல்லமுடியாத கட்சியா பாஜக?
உக்ரைனில் என்ன நடக்குது? – 11
யனுகோவிச் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முடிவுசெய்துவிட்டன. அதற்கான வாய்ப்பினைத் தேடிக்கொண்டிருந்தன. யனுகோவிச் அரசு ஒரு சோசலிச அரசாகவெல்லாம் இருந்துவிடவில்லை. அது முழுக்க ஊழல்கள் நிறைந்ததாகவும் குடும்ப ஆட்சிமுறையைக் கொண்டதாகவும் தான் இருந்தது. ஆனாலும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வளைந்துகொடுக்காத ஆட்சியாகவும் இரஷ்யாவுடன் கொஞ்சம் நெருக்கம் காட்டுவதாகவும் இருந்தது. அது போதாதா பெரியண்ணன்களுக்கு? இம்முறை உக்ரைனை பகடைக்காயாக வைத்து இரஷ்யாவுக்கு தொல்லை கொடுக்க அவர்கள் கையில் எடுத்து ஆயுதம் என்ன தெரியுமா? அதி தீவிர வலதுசாரி… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 11
உக்ரைனில் என்ன நடக்குது? – 10
அமெரிக்காவை கோபம் கொள்ள வைத்த உக்ரைனிய அரசு: அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனின் அதிபராகப் பதவியேற்றார் யனுகோவிச். நல்லவர், வல்லவர், சமத்துவ சூறாவளி என்றெல்லாம் அவரையும் அவரது கட்சியையும் சொல்லிவிடமுடியாது என்றாலும் கூட, ஒருசில தெளிவான முடிவுகளை அவர் எடுத்தார். அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினால் ஆயுதங்கள் மட்டும் தான் கிடைக்கும், ஆனால் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான எதுவும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்டவர் என்பதால், இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார். முந்தைய அதிபர்களால் இயற்கை எரிவாயு… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 10
உக்ரைனில் என்ன நடக்குது? – 9
தேர்தலில் ஒருவழியாக யனுகோவிச்சைத் தோற்கடித்துவிட்டபின்னர், அமெரிக்க ஆதரவு பிரச்சாரகர்களும் நிதிவழங்கிய இடைத்தரகு நிறுவனங்களும் உக்ரைனிலிருந்து நடையைக் கட்டி வெளியேறின. அரசியல் பின்னணியே இல்லாமல், வெறுமனே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனும் ஆதிக்கத்துடனும் வெற்றிபெற்று அதிபராகிவிட்ட யுஷ்சென்கோவினால் ஆட்சியைத் திறம்பட நடத்தமுடியவில்லை. அரசின் ஒட்டுமொத்த அதிகார மையத்தில் பணிபுரிந்த திறமையான நிர்வாகிகள் அனைவரையும் துரத்திவிட்டு, புதிதாக தனக்கு வேண்டியவர்களை நியமித்தார் யஷ்சென்கோ. அரசு தள்ளாட ஆரம்பித்தது. அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினால் அவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 9