கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது? – 10

அமெரிக்காவை கோபம் கொள்ள வைத்த உக்ரைனிய அரசு: அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பையும் மீறி உக்ரைனின் அதிபராகப் பதவியேற்றார் யனுகோவிச். நல்லவர், வல்லவர், சமத்துவ சூறாவளி என்றெல்லாம் அவரையும் அவரது கட்சியையும் சொல்லிவிடமுடியாது என்றாலும் கூட, ஒருசில தெளிவான முடிவுகளை அவர் எடுத்தார். அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினால் ஆயுதங்கள் மட்டும் தான் கிடைக்கும், ஆனால் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான எதுவும் கிடைக்காது என்பதைத் தெரிந்துகொண்டவர் என்பதால், இரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையைத் துவக்கினார். முந்தைய அதிபர்களால் இயற்கை எரிவாயு… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 10

கட்டுரை

உக்ரைனில் என்ன நடக்குது? – 9

தேர்தலில் ஒருவழியாக யனுகோவிச்சைத் தோற்கடித்துவிட்டபின்னர், அமெரிக்க ஆதரவு பிரச்சாரகர்களும் நிதிவழங்கிய இடைத்தரகு நிறுவனங்களும் உக்ரைனிலிருந்து நடையைக் கட்டி வெளியேறின. அரசியல் பின்னணியே இல்லாமல், வெறுமனே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனும் ஆதிக்கத்துடனும் வெற்றிபெற்று அதிபராகிவிட்ட யுஷ்சென்கோவினால் ஆட்சியைத் திறம்பட நடத்தமுடியவில்லை.  அரசின் ஒட்டுமொத்த அதிகார மையத்தில் பணிபுரிந்த திறமையான நிர்வாகிகள் அனைவரையும் துரத்திவிட்டு, புதிதாக தனக்கு வேண்டியவர்களை நியமித்தார் யஷ்சென்கோ. அரசு தள்ளாட ஆரம்பித்தது. அதனை எதிர்த்து பாராளுமன்றத்தில் எம்பிக்கள் கேள்வி எழுப்பினால் அவர்களும் தண்டிக்கப்பட்டார்கள்.… Continue reading உக்ரைனில் என்ன நடக்குது? – 9