கட்டுரை

செப்டம்பர் 12 – கியூபன்5

இன்றைய தினம் வரலாற்றின் மிகமுக்கியமான தினம். 23 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், கியூபாவைச் சேர்ந்த ஐந்து பேரைக் கைது செய்தது அமெரிக்க அரசாங்கம்.  ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டு எண்ணிலடங்கா சித்தரவதைக்கு அமெரிக்க அரசும் நீதித்துறையும் அவர்களை ஆளாக்கின. அவர்கள் ஐவரும் பல்வேறு கொடும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே இரவுபகல் பாராமல் கொடுமைப்படுத்தப்பட்டனர். பல கொலைகளைச் செய்த மோசமான சீரியர் கில்லர்களை நடத்துவதைப் போன்று அந்த ஐந்து கியூபர்களும் நடத்தப்பட்டனர். அப்படி என்னதான் தவறு… Continue reading செப்டம்பர் 12 – கியூபன்5

கட்டுரை

எது ஆசிரியர் தினம்?

இதையெல்லாம் சொன்னவர் யார்? "இந்துக்களின் சகிப்புத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டே சாதியாகும்" "சாதி தான் மனிதர்களை சண்டைபோடாமல் அமைதியாக வாழ வைக்கும் அமைப்புமுறை" "இனங்களுக்கிடையிலான பிரச்சனைகளை போரின் மூலம் ஐரோப்பியர்கள் எதிர்கொண்ட காலத்தில், நாம் தான் சாதி என்கிற அமைப்பு முறையைக் கொண்டு அமைதியாக அப்பிரச்சனையைத் தீர்த்தோம்" "சாதி அடிப்படையிலான ஒரு சமூகத்தை உருவாக்கினால், அதுவே அன்பையும் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் வழங்கும் சமூகமாக இருக்கும். அதனால் சாதி அமைப்பு முறையில் இருந்து நாம் பாடம்கற்றுக்கொண்டு ஒரு சமூகத்தை… Continue reading எது ஆசிரியர் தினம்?

கட்டுரை

கொரோனாவும் தனியார் கல்விநிலைய ஆசிரியர்களும்

இந்த சுரண்டல் அமைப்பு முறையின் காரணமாகவும் அதனோடு கைகோர்த்து வந்திருக்கும் கொரோனாவினாலும் யார் யாரெல்லாம் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள் என்பது மிகவிரிவாக ஆய்வுசெய்யப்பட வேண்டியது அவசியமாகும். அப்படியான ஒரு பணியினை தோழர் அருண்கண்ணனும் கிஷோர் குமாரும் சிலப்பல தோழர்களின் உதவியுடன் தனியார் கல்லூரி ஆசிரியர்களின் நிலையை ஆய்வு செய்து இக்கட்டுரையை எழுதியிருக்கின்றனர். அதுவும் மனதில் தோன்றியதையெல்லாம் வார்த்தைகளால் கோர்த்து எழுதப்பட்ட யூகக்கட்டுரையாக இல்லாமல், தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு, ஆய்வு நடத்தி, தகவல் சேகரித்து அதன்மூலம்… Continue reading கொரோனாவும் தனியார் கல்விநிலைய ஆசிரியர்களும்

கட்டுரை

பெகாசஸ்

கடந்த ஆண்டு இந்தியாவை வேவுபார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து, மக்களின் தனிமனித உரிமை மீது அக்கறை கொண்ட அரசாக தன்னைக் காட்டிக்கொண்டது.   நிற்க..... சந்தேகத்தின் பேரிலேயே இத்தனை சீன செயலிகளை தடை செய்த இந்திய அரசு, உண்மையாக நிரூபிக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் உதவியுடனும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் வைரசின் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனத்தையும் இஸ்ரேல் அரசையும் இந்திய அரசு… Continue reading பெகாசஸ்

கட்டுரை, குழந்தைகள் இலக்கியம்

பப்ஜிமதனும் குட்டிஸ்டோரியும்

பப்ஜி மதன் எத்தனை கோடி சொத்து சேர்த்திருக்கிறான், எத்தனை சொகுசு கார் வைத்திருக்கிறான் என்கிற விவாதம் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நடக்கட்டும். ஆனால், அந்த விவகாரத்தில் அதைவிட மிகப்பெரிய சமூகப்பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதனைத் தான் நாம் அதிகமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பப்ஜி மதனுடைய வீடியோக்களில், அவனுடன் பப்ஜி விளையாடிவர்களிலும், அவனுடைய யூட்யூப் சானலுக்கு பார்வையாளர்களாக இருந்த இலட்சக்கணக்கானவர்களிலும் பெரும்பகுதி சிறுவர்களே என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது. 13 இல் இருந்து 18 வயது… Continue reading பப்ஜிமதனும் குட்டிஸ்டோரியும்

கட்டுரை, குழந்தைகள் இலக்கியம்

சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…

சிறுவர் இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். சிறுவர் இலக்கியத்தில் உலகளாவிய சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அதனை நிகழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சூழலில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். சிறுவர் இலக்கியத்திற்காக ஏதோவொரு வகையில் உழைக்கும் ஏறத்தாழ முன்னூறு பேர் ஜூம் வழியாக ஒரே நேரத்தில் இணைந்து உருவாக்கிய சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கலாம். அதே போல, சிறுவர் இலக்கியத்தில் ஆண்களின்… Continue reading சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…

கட்டுரை

நிழல்இராணுவங்கள் – தமுஎகச விருது 2019

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் நூலுக்கு தமுஎகச வழங்கியிருக்கிறது. இந்த விருது எனக்கு மிகமிக முக்கியமான விருது. ஏனெனில் இதற்கு முன்பு எழுதியதற்காக எந்தவொரு விருதையும் நான் வாங்கியதில்லை. ஒரு வெங்கலக்கிண்ணம் கூட பரிசாகப் பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் கூட, பேச்சுப்போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கட்டுரை எழுதும் போட்டிகள் எதிலுமே கலந்துகொண்டதாக நினைவு இல்லை. அதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் என்னவென்றால், என்னுடைய கையெழுத்து மிக மோசமாக இருக்கும். கட்டுரை… Continue reading நிழல்இராணுவங்கள் – தமுஎகச விருது 2019

கட்டுரை

தீர்த்தமலை தகவல் தொழில்நுட்ப அறிவு மையம்

அது 2008 ஆம் ஆண்டு. அப்போது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் சிபிஎம் ஐச் சேர்ந்த தோழர் டில்லிபாபு. அந்த சட்டமன்ற எல்லைக்குள் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் தீர்த்தமலையில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தைத் துவங்கும் திட்டத்தை அவரும் அவர் சார்ந்திருக்கிற கட்சியின் உதவியோடும் ஒருசில இயக்கங்களின் உதவியோடும் தயாரிக்கப்பட்டது. திட்டம் தயாராகிவிட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த இடம் வேண்டுமே. தீர்த்தமலையில் நூல்களே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பழைய… Continue reading தீர்த்தமலை தகவல் தொழில்நுட்ப அறிவு மையம்

கட்டுரை

மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

மேற்குவங்கத்தில் சிபிம் ஆட்சியில் இருந்தபோது நந்திகிராமில் மக்களுக்கு எதிராக காவல்துறை அட்டூழியம் நிகழ்த்தியதாக மாநிலம் முழுவதும் செய்திபரப்பி ஆட்சிக்கு வந்தவர் மம்தா. அன்றைய சிபிம் ஆட்சிக்கு எதிராக இந்த ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டுமே மக்கள் முன்பு வைத்து, ஓட்டுக்களாக மாற்றி மம்தா முதல்வரானார். நந்திகிராமில் சிபிம் க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்த சுவேந்து அதிகாரி என்பவர், பின்னர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இத்தனை வருடங்களாக மம்தாவின் கட்சியில் இருந்த அவர், தற்போது… Continue reading மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

கட்டுரை

முஸ்லிம்களுக்கு வீடு கிடையாதா?

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடிபோன செய்தி கேட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். “வீடு என்ன விலைடா?” என்று கேட்டேன். “அறுபது இலட்சம் மச்சி” என்றான். “காசு குடுத்து வாங்கினியா?” எனக் கேட்டேன். “அவ்ளோ காசு என்கிட்ட ஏதுடா. எல்லாம் லோன் தான்” என்றான். சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டைச் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். சுவரெல்லாம் வெடிப்பு விழுந்ததைக் காண முடிந்தது. “சுத்திக் காட்டமாட்டியா?” என்று கேட்டேன்.  … Continue reading முஸ்லிம்களுக்கு வீடு கிடையாதா?