கட்டுரை, குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

கயிறு – நூல் அறிமுகம்

12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு, இந்நூலை வெளியிட்டிருக்கிறது.  கதையைப் பற்றி ஏதாவது ஒரேயொரு வரியை எழுதினால் கூட கதையைச் சொல்வதாகிவிடும். அதனால் அதனைச் சொல்லாமல் தாண்டிச் சென்று இந்நூலை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன். 12 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கான கதைகளில் அதிகமான ஃபேன்டசி இருக்கும். மனிதர்களின் உறவு சார்ந்த… Continue reading கயிறு – நூல் அறிமுகம்

கட்டுரை, சினிமா அறிமுகம்

மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

சமீபத்தில் “மால்கம் & மேரி” என்றொரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் மொத்தமே இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான். இருவரின் முகத்தைத் தவிர வேறு யாரையும் காட்டமாட்டார்கள். வேறு யாரின் குரலும் ஒலிக்காது. படம் மொத்தமும் ஒரே வீட்டிற்குள் ஒரே இரவில் தான் நடக்கும். ஒருவேளை அதுவொரு குறும்படமோ என்று நினைத்துவிடாதீர்கள். முழுநீளத் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? கருப்பினத்தைச் சேர்ந்த மால்கம் என்பவர் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்பு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.… Continue reading மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

கட்டுரை

தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்கும் விதவிதமான வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். ஒரேமாதிரியான திட்டத்தோடோ, ஒரேமாதிரியான வியூகத்துடனோ பாஜக தேர்தலை எதிர்கொள்வதே இல்லை. ஒரே நாடு, ஒரே ரோடு என்றெல்லாம் தேசம் முழுவதும் பேசுவது போன்று தெரிந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலமும் தனி நாடும் கேட்கிற கட்சிகளோடு கைகோர்த்துக்கொண்டு ஒரே நாடு கோரிக்கையை பேசாமல் இருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்தே கொல்லும் உத்தரப்பிரதேசத்தில் அப்படியாக கொலை செய்பவர்களின் கருத்தியலை ஆதரிக்கும் அதே பாஜக, கேரளாவுக்கு வந்தால்… Continue reading தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

கட்டுரை

ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிற அதேவேளையில் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இம்முறையும் பாஜக சார்பாக பொன் இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வென்றால் அமைச்சராவார், அவர் வென்றால் பாலம் கட்டுவார் என்றெல்லாம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில உண்மைத் தகவல்களை நாம் இந்த நேரத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒரு பாராளுமன்ற எம்பியின் மிக முக்கியமான பணி என்ன தெரியுமா? சாலையில் சில விளக்குகளை அமைப்பதோ, சில தெருக்களுக்கு சாலை போடுவதோ அல்ல. நம்முடைய… Continue reading ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

கட்டுரை, நூல் அறிமுகம்

பச்சை வைரம் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயத்தினுடைய புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகத்துக்கு நாமெல்லாம் பெரியளவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். சமூக அக்கறை மிகுந்த சிறுவர் கதைளை வெளியிடுவதில் தமிழ்ச்சமூகத்தில் அவர்களுடைய பங்கு மிகமிக முக்கியமானதாகும். இந்த நூலின் துவக்கத்திலேயே இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நூல் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியமான வயசு என்று நினைக்கிறேன். அதற்குக் கீழுள்ள வயதுடைய குழந்தைகளுக்கு ஃபாண்டசியா நிறைய கதைகளை சொல்கிறோம். குறிப்பாக மனிதர்களுடைய தன்மைகளை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது 12 வயதுக்கு… Continue reading பச்சை வைரம் – நூல் அறிமுகம்

கட்டுரை, குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

வானவில் – நூல் அறிமுகம்

சிறுவர் இலக்கியத்தில் மிகமிக முக்கியமானதும் அவசியமானதுமாக இருப்பது சிறுவர் பாடல்கள் என்பேன். கதைகளைக் கேட்பதற்கு முன்பே, பாடல்கள் வழியாக பலவற்றைத் தெரிந்துகொள்ளவே குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது துவங்கி, பள்ளிக்கு செல்லும் வயதுவரையிலும் அக்குழந்தைக்கு ஏதாவது பாடலை வீட்டிலிருப்பவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அது இப்போதெல்லாம் மிகமிகக் குறைந்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த தொலைக்காட்சிகளும் யூட்யூப்களும் வந்துவிட்ட காலத்தில், ரைம்ஸ் எல்லாம் அதன்வழியாகத் தான் பாடப்படுகின்றன. அப்பாடல்களில் அனிமேசனுக்கும் அதில் காண்பிக்கப்படும் பொருட்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமெல்லாம்… Continue reading வானவில் – நூல் அறிமுகம்

கட்டுரை, நூல் அறிமுகம்

வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்

இந்நூலைப் படித்துமுடித்ததில் இருந்தே வருத்தமும் கோபமும் குழப்பமும் ஆத்திரமும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. அந்த 180 பக்க நூலின் மொத்த சாராம்சமே, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இன்றைய நவீன மருத்துவம் மட்டும் தான் முட்டாள்தனம்” என்று சொல்வது தான். அதாவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் இருக்கிற பிரசவ வார்டுகள் மொத்தத்தையும் இடித்துத் தள்ளிவிட்டு, பிரசவம் பார்க்கிற மருத்துவர்கள் அனைவரையும் வேறெதாவது வேலைக்கு அனுப்பவேண்டும் என்பது தான் அந்த நூலின் விருப்பமும் ஆசையும் தீர்மானமும்.… Continue reading வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்

கட்டுரை

அசாருதீனுக்கு என்ன ஆனது?

'அசாருதீனின் ஊழல் காலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை மீட்டவர் சச்சின்' என்று சங்கிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது முற்றிலும் தொடர்பற்ற ஒரு விவாதம் தான் என்றாலும், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2000 ஆம் ஆண்டில் அசாருதீன் மீது பணம் வாங்கிக்கொண்டு மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ யும் ஐசிசியும் ஆயுட்காலத் தடைவிதித்தன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அசாருதீன். அந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்று… Continue reading அசாருதீனுக்கு என்ன ஆனது?

கட்டுரை

தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

சச்சின் டெண்டுல்கரெல்லாம் தேசபக்தியைப் பற்றியும், அடுத்த நாட்டுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு சொல்வதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை. உலகிலேயே அதிகமான நாடுகளின் பிரச்சனைகளில் ஒட்டுக்கேட்பதையும் மூக்கைநுழைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் யாரென்றால், பல வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தான். ஐரோப்பாவில் இருக்கிற ஒருநாட்டில் உளவுபார்ப்பதற்காகவே, ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அத்தகைய இந்துத்துவா அமைப்பொன்றின் ஐரோப்பிய பிரிவில் வேலைபார்க்கும் ஒருவனை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அவனுடன் சில மாதங்கள் தொடர்ந்து உரையாடியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. இங்கிலாந்தில் வாழும்… Continue reading தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

கட்டுரை

பாஜகவின் உண்மை முகம்

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும். பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது. 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், அரசு… Continue reading பாஜகவின் உண்மை முகம்