சச்சின் டெண்டுல்கரெல்லாம் தேசபக்தியைப் பற்றியும், அடுத்த நாட்டுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு சொல்வதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை.
உலகிலேயே அதிகமான நாடுகளின் பிரச்சனைகளில் ஒட்டுக்கேட்பதையும் மூக்கைநுழைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் யாரென்றால், பல வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தான்.
ஐரோப்பாவில் இருக்கிற ஒருநாட்டில் உளவுபார்ப்பதற்காகவே, ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அத்தகைய இந்துத்துவா அமைப்பொன்றின் ஐரோப்பிய பிரிவில் வேலைபார்க்கும் ஒருவனை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அவனுடன் சில மாதங்கள் தொடர்ந்து உரையாடியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களிடையே நிலவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரானதொரு சட்டம் (எந்த நாட்டுக்குப் போனாலும் சாதியைத் தூக்கிட்டுப் போறானுங்களே) கொண்டு வந்தபோது, அதைத் தடுத்து நிறுத்தியதும் இந்த அமைப்பினர் தான் என்றான். அதுபோக ஒவ்வொரு நாட்டின் வலதுசாரிக் குழுக்களுடனும் இணைந்து அந்தந்த நாட்டின் பிரச்சனைகள் குறித்து தகவல் சேகரித்து நாக்பூருக்கு அனுப்புவது, உள்ளூர் வலதுசாரிக் குழுக்களுக்கு உதவுவது போன்ற பணிகளை செய்வது குறித்தெல்லாமும் பல தகவல்கள் அவனிடம் இருந்து எனக்குக் கிடைத்தது.
நீண்டகாலம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நான், ஒருகட்டத்தில் இந்துத்துவ அமைப்புகளைப் பற்றி விமர்சனம் வைக்கத் துவங்கியபோது, “இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் உன்னை சுட்டிருப்பேன்” என்றான்.
பின்னர் ஒருநாள் அவனுக்கு வேறொரு நாட்டில் அப்பணியைச் செய்யச்சொல்லி உத்தரவு வந்திருப்பதாக கிளம்பிவிட்டான்.
அவனிடம் இருந்து கிடைத்த பல தகவல்களை எல்லாம் இப்போதைக்கு வெளியே சொல்லிவிடமுடியாது. அது ஆர்எஸ்எஸ் சாகாக்களில் பயிற்சிபெற்றவர்களில், நன்றாகப் படித்து பலநாடுகளுக்கு ஐடி வேலைக்குச் செல்பவர்களை பலவேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வது வரையிலும் பேசவேண்டியிருக்கும்.
சமீபத்தில் கூட, ஜெர்மனியில் வாழும் சீக்கியர்களையும் காஷ்மீரிகளையும் உளவுபார்த்ததற்காக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று தற்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து உதவியது இந்திய அரசு என்கிற உண்மையும் வெளிவந்திருக்கிறது. அதற்குள் இன்னொரு இந்தியரும் அடுத்த நாட்டுப் பிரச்சனையில் தலையிட்டு உளவுபார்த்ததாக தற்போது ஜெர்மனியில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், இந்த “Overseas friends of BJP” என்கிற அமைப்பும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் செய்கிற வேலைகளை எல்லாம் சொல்லிமாளாது.
அதனால்,
சச்சின் சொல்லும் அறிவுரை எல்லாம், இந்த வலதுசாரி இந்துத்துவ குழுக்களுக்குத் தான் போய்ச்சேரனும்