கடந்த ஆண்டு இந்தியாவை வேவுபார்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஐம்பதுக்கும் மேற்பட்ட சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து, மக்களின் தனிமனித உரிமை மீது அக்கறை கொண்ட அரசாக தன்னைக் காட்டிக்கொண்டது.
நிற்க…..
சந்தேகத்தின் பேரிலேயே இத்தனை சீன செயலிகளை தடை செய்த இந்திய அரசு, உண்மையாக நிரூபிக்கப்பட்ட இஸ்ரேலிய அரசின் உதவியுடனும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையில் இருந்தவர்களால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் வைரசின் நிறுவனமான என்எஸ்ஓ நிறுவனத்தையும் இஸ்ரேல் அரசையும் இந்திய அரசு ஒரு வழி செய்துவிடும் என்று தானே நினைக்கிறீர்கள்…
வாயில் அடிச்சுக்குங்க…
உலகின் மிக மோசமான ரௌடி இராணுவத்தை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு இந்திய இந்துத்துவா அடிமை என்பதைப் புரிந்துகொள்வது மிக அவசியம். 1948இல் பாலஸ்தீன மக்களிடம் இருந்து நிலத்தைப் பறித்து இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதே அதை எதிர்த்தும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாமலும் தைரியமாக செயல்பட்ட நேருவின் அரசு அல்ல இப்போது இருக்கிற அடிமை அரசு.
பாலஸ்தீனர்களின் மீது அவ்வப்போது குண்டு வீசுவதும், ராக்கெட் வீசுவதும் ஏதோ பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு மட்டும் தான் என்று நினைத்தால் நம்மைவிட பெரிய அப்பாவிகள் யாருமில்லை. ஏனெனில், இஸ்ரேல் தயாரிக்கும் எல்லா ஆயுதங்களையும் பாலஸ்தீனர்களின் மீது பயன்படுத்தி சோதனை செய்துவிட்டு, “இது சோதனை செய்து தயாரிக்கப்பட்ட ஆயுதம்” என்று லேபில் ஒட்டியே உலக நாடுகளுக்கு விற்கிறது இஸ்ரேல். அப்படி விற்பனை செய்தே, எந்த உள்நாட்டு மற்றும் அண்டைநாட்டுப் போரிலும் இல்லாதபோதும் இன்று உலகிலேயே அதிகமாக ஆயுதம் இறக்குமதி நாடாக விளங்கும் இந்தியாவிற்கு அதிகமான ஆயுதங்களை விற்பனை செய்கிறது இஸ்ரேல்.
ஆக, யாருடனும் போருக்குப் போகாத சீனாவிடம் வீரத்தைக் காட்டுவதும், ரௌடி இஸ்ரேலுடன் பம்மிப் பதுங்குவதும் தான் இந்தியா என்கிற மெகா தேசத்தை அடிமை தேசமாக மாற்றிய பார்ப்பனிய இந்துத்துவா அரசின் கேடுகெட்ட சாதனை…