கட்டுரை

இணையத்தில் விவாதம் செய்யலாமா

ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற விவாதமானது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அது என்றுமே ஒரு மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேதான் இருந்துவந்திருக்கிறது. இதற்கு மாறாக அதிகப்படியான மக்களிடம் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகங்களில் ஒருவழித்தொடர்புதான் சாத்தியமாகிறது. அது வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சில் வெளியாகிற எழுத்துக்களாகட்டும், தலைவர்களின் மேடைப்பேச்சாகட்டும் - இவை அனைத்துமே மிகக்குறைந்த அளவிலேயே விவாதத்திற்கு வழிவகுத்தன. தவறான தகவல்களுடனும், தனிப்பட்டமுறையில் நமக்கு ஏற்பில்லாத கருத்துக்களுடனும் வெளியாகும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் அந்த பத்திரிக்கையை மூடிவைத்துவிட்டு… Continue reading இணையத்தில் விவாதம் செய்யலாமா