சிறுகதை

நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)

நான் நின்றுகொண்டிருக்கும் இத்தெருவிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. ஓசி சோறும், வேலைசெய்யாமலெடுத்த ஓய்வும் என்தொப்பையினை ஒரு சுற்று பெருக்க வைத்திருப்பது உண்மைதான். "வாங்க வெளிய போகலாம்" என்று இழுத்துக்கொண்டே தெருவினைக்கடந்தும் என்கையை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தான், எனக்கு இருப்பிடம் கொடுத்த ராமு. "நாம எங்கப்பா போறோம்?" என்கிற கேள்வியை வழிநெடுக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். சிரிப்பைத்தவிர வேறெதுவும் பதிலாகத்தரவில்லை அவன். ஒவ்வொரு தெருவைத்தாண்டுகிறபோதும் மேலும் சிலர் எங்களுடன் சேர்ந்துநடக்கத்துவங்கியது எனது குழப்பத்தை கூட்டத்தான் செய்தது.… Continue reading நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)

கட்டுரை

வியாபாரமாகும் உயர்கல்வி -1

மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். நெருப்பினை உருவாக்குவது எப்படி என்று கண்டறிந்தவன் அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுத்த காலம் முதலே கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற தனியார்மயமும் வணிகமயமாக்கலும், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும், எதனை கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் 'பணமே' தீர்மானிக்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உயர்கல்விக்கான "மொத்த சேர்க்கை விகிதம்" (Gross Enrolment Ratio ) உலக சராசரியை விடவும் பாதிக்கும் குறைவாகத்தான் இந்தியாவில்… Continue reading வியாபாரமாகும் உயர்கல்வி -1

சினிமா அறிமுகம்

அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)

'அமெரிக்கா ஒரு சொர்கபுரி' என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும்… Continue reading அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)