சிறுகதை

வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)

வீட்டிலிருந்து வெளியே செல்ல கிளம்பிய வாசுகி, எதிர்வீட்டைக்கண்டதும் நிமிடமொன்று நின்று அவ்வீட்டையே உற்று நோக்கினாள். காந்தி நகரிலேயே முதன்முதலாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்கிய வீடுதான் அது. அதற்காக இந்த ஊரே, அவ்வீட்டை 'டிவி காரங்க வீடு' என்றும், அவ்வீட்டிலுள்ள மனிதர்களை 'டிவிகாரரு' 'டிவி காரம்மா' 'டிவி காரம்மா பொண்ணு' என்று அழைத்துவருகிறது. 'டிவி பெட்டி கருப்பா? சிவப்பா? வட்டமா? சதுரமா?' என்றெல்லாம் ஆயிரம் குழப்பங்களோடு அவ்வீட்டிற்கு நுழைந்தபோதெல்லாம் கடுஞ்சொற்களின் மூலமாக வாசலோடு விரட்டப்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்காமல் வாசலைத்தாண்டியதில்லை வாசுகி.… Continue reading வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)

கட்டுரை

கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…

கடந்த ஒரு வாரமாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு குறித்தே உலக ஊடகங்களெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, மற்றுமொரு மனிதரின் மறைவு மறைக்கப்பட்டேவிட்டது. அவர்தான் 'டென்னிஸ் ரிச்சி'. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து,  தொலைபேசியைக்கண்டுபிடித்த அலக்சாண்டர் கிரகாம்பல் உருவாக்கிய 'பெல் லாப்ஸ்' என்கிற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.  அங்கு வேலைபார்த்தபோது கணினித்துறைக்காக ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றவர்.   1973 ஆம் ஆண்டு வரை மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருந்த கணினித்துறை, "சி" என்கிற கணினிக்கான நிரல்மொழியின் வருகைக்குப்பின்னர்தான்… Continue reading கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…