சினிமா அறிமுகம்

அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)

'அமெரிக்கா ஒரு சொர்கபுரி' என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டின் ஆட்சியாளர்களைப்போலே அவர்களின்  திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்துவந்திருக்கின்றன. தேசபக்தித்திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக்காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்கமுடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவபோக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும்… Continue reading அமெரிக்காவின் 'அங்காடி தெரு' (பிரட் அண்ட் ரோசஸ் திரைப்படம்)

கட்டுரை

அன்னா ஒழித்துவிட்ட ஊழல்….

ஊழல் என்பது என்ன? அதன் மூலவேர்கள் எவை? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலைத்தேடாமல், அல்லது நமக்கு வசதியான பதிலை வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள். வருடாவருடம் நாட்டின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று 'ஏழை' கார்பொரேட் நிறுவனங்களை வைத்திருக்கும் அம்பானிகளுக்கும் கும்பானிகளுக்கும் சலுகை அளிக்கப்படுகிறதே! அதற்கு நன்றிக்கடனாக, ஒவ்வொரு மந்திரிகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒரு 1000 கோடி அம்பானி முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம் (கலைஞர் தொலைகாட்சி விவகாரத்திலும் இது நடந்ததுதான்).… Continue reading அன்னா ஒழித்துவிட்ட ஊழல்….

சிறுகதை

5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்… (சிறுகதை)

கோடைவிடுமுறை முடிந்து புதிய வகுப்பில் நுழைந்தபோது, சில புதிய முகங்களும் எனது வகுப்பில் சேரத்துவங்கியிருந்தன. இராகவனும் அப்படிச்சேர்ந்தவந்தான். அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், அன்றே எங்களுடைய நட்புவட்டத்திற்குள் வந்துவிட்டான். "எங்க பழைய ஸ்கூல்ல எப்படி எல்லாம் அட்டகாசம் பண்ணுவேன் தெரியுமா.... பாக்கெட்ல வேர்க்கடலய வெச்சிக்கிட்டு மிஸ்சுக்கே தெரியாம க்ளாஸ்லையே சாப்புடுவேன்... ஆபிஸ் ரூம்ல இருந்து நாலு சாக்பீஸ் கேட்டுவாங்கிட்டு வந்து அதுல ரெண்டதான் எங்க மிஸ்கிட்ட குடுப்பேன். மீதிய நான் பாக்கெட்ல போட்டுப்பேன். இந்த மாதிரி ஏகப்பட்ட வேலை… Continue reading 5 ஸ்டாரும் 50 ஆசை சாக்லெட்டுகளும்… (சிறுகதை)

கட்டுரை

நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

நார்வே நேரப்படி மாலை சுமார் 3.22 அளவில் தலைநகரான ஓஸ்லோவில் எட்டு பேரின் உயிரைக்குடித்த குண்டுவெடிப்புச்சம்பவம் நிகழ்ந்தது. "நார்வேயில் குண்டுவெடிப்பா?" என உலகமே அதிர்ச்சியாக கேள்விஎழுப்பியதற்குக்காரணம் இரண்டாம் உலகப்போருக்குப்பினால் எவ்வித குண்டுவெடிப்பு சப்தமும் கேட்டதில்லை நார்வேயில். அதிர்ச்சியின் வீரியம் குறைவதற்கு முன்னரே அடுத்த இரண்டு மணிநேரத்தில் நார்வேயை ஆளும் தொழிலாளர்கட்சியின் இளைஞர்பிரிவு நடத்திக்கொண்டிருந்த முகாமில், இராணுவ உடையணிந்தொருவன் கண்மூடித்தனமாக சுட்டு 70க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்கிறான். இப்படுகொலை நடந்தது தலைநகர் ஓஸ்லோவுக்கருகில் இருக்கும் சிறிய தீவான உட்டோயாவில்.… Continue reading நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'

சிறுகதை

ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)

1) ஞாயிற்றுக்கிழமை காலை! டீக்கடை பெஞ்சிலமர்ந்து தினத்தந்தியின் பக்கங்களை ஆளுக்கொன்றாக பிரித்துவைத்து டீயின் சூட்டையும் மிஞ்சுமளவுக்கு விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தனர். "ஒரு டீ போடுங்கண்ணே" ஜீவாவின் குரலைக்கேட்டு 'எப்பவுமே வராதவன் இன்னைக்கு வந்துருக்கானே' என அண்ணாச்சி ஆச்சர்யர்மாய் பார்த்தார். "ஒன்னும் இல்லண்ணே. வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க.  தனியா வெறுப்பா இருந்திச்சி... அதான் வந்தேன்..." பேப்பர் ஏதும் கிடைக்காமல் ஒருவரின் பக்கத்திலமர்ந்து பேப்பரை பங்குபோட்டு படித்தான். வரிக்கு வரி விவாதம் நடந்துகொண்டிருந்ததை பார்ப்பதற்கே ஒரு புதிய அனுபவமாக இருந்தது… Continue reading ஏதாவது செய்யணும்னே… (சிறுகதை)

கவிதை

இருகோடுகள்…

  ரோஜா நாயகனாகபாரதிராஜா கிராமமொன்றில்மணமுடித்து திரும்பினேன்! வாசற்கதவை திறந்தபின்னும்வீட்டினுள் வாராமல்,ஆரத்தியை எதிர்நோக்கிஅங்கேயே நின்றிருந்தாள்! "நிற்காமல் உள்ளே வா..நம்பிக்கையில்லை எனக்கதிலே!" வாடிய முகத்தோடுவீட்டறைகள் சுற்றிப்பார்த்து,வினவினாள் பதறியபடி,"பூஜையறை எங்கே?" "நம்பிக்கையில்லை எனக்கதிலே" சமையலறை ஓரத்திலேசித்திவிநாயகர் படம்வைத்து,சாமியறை இதுவென்றாள்! "சுண்டல் தந்தால் சரிதான்" - எனசிரித்துக்கொண்டே நகர்கையில்,அலைபேசியில் தோழரொருவர்,'கல்விக்கட்டணவிதி கமிட்டியொன்று அறிவித்தும்காசுபுடுங்கும் கயவர்களைகண்டித்துக்குரலெழுப்பகுடும்பங்களாய் போராடும்முடிவொன்றை' தெரிவித்தார்! தோழர்கள் சகிதமாய்தொடர்புகொண்டோம் பெற்றோரை! ஆதரவுக்கரங்கள்சில ஆங்காங்கே கிடைத்தாலும்"போராட்டம்" தவறென்றுபுத்தியிலே கலந்திருக்கபீதியானோர் எண்ணிக்கையோ அதிகமோ அதிகமிங்கே! இரவுகளை சுவரொட்டிகளோடும்பகல்களை மக்களோடும்போராட்ட நாள்வரையில்மெதுமெதுவாய் நகர்த்திவந்தோம்! எதிர்நோக்கிய நாளன்று… Continue reading இருகோடுகள்…

கட்டுரை

இணையத்தில் விவாதம் செய்யலாமா

ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற விவாதமானது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அது என்றுமே ஒரு மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேதான் இருந்துவந்திருக்கிறது. இதற்கு மாறாக அதிகப்படியான மக்களிடம் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகங்களில் ஒருவழித்தொடர்புதான் சாத்தியமாகிறது. அது வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சில் வெளியாகிற எழுத்துக்களாகட்டும், தலைவர்களின் மேடைப்பேச்சாகட்டும் - இவை அனைத்துமே மிகக்குறைந்த அளவிலேயே விவாதத்திற்கு வழிவகுத்தன. தவறான தகவல்களுடனும், தனிப்பட்டமுறையில் நமக்கு ஏற்பில்லாத கருத்துக்களுடனும் வெளியாகும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் அந்த பத்திரிக்கையை மூடிவைத்துவிட்டு… Continue reading இணையத்தில் விவாதம் செய்யலாமா

கட்டுரை

தனி தெரு கேட்டு போராட்டம்…

நான் பிறந்தது முதல் வசித்து வருவது நேதாஜி நகரின் இரண்டாவது குறுக்குத்தெருவில். இரண்டாவது குறுக்குத்தெரு என்பது இரண்டாவது தெருவையும் மூன்றாவது தெருவையும் இணைக்கிற ஒரு சிறிய தெருவாகும். "டேய் இதெல்லாம் ஒரு தெருவா? குறுக்கு சந்தையெல்லாம் தெரு கிறுன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்கடா......" என்பன போன்ற வார்த்தைகளை கேட்டாலே கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு. ஆனாலும் 2 ஆவது தெரு பசங்களும் சரி, 3 ஆவது தெரு பசங்களும் சரி எங்களை இப்படி கிண்டல் செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.… Continue reading தனி தெரு கேட்டு போராட்டம்…