காலையில் கண்விழித்துப் பார்த்தபோது எங்கள் வீட்டைச்சுற்றிலும் எங்களையே குறிவைத்து பளபளப்பான துப்பாக்கிகளை கையிலேந்தி நின்றுகொண்டிருந்தது ஒரு ரவுடிக்கூட்டம். சன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தால், அண்டைவீட்டு மக்களெல்லாம் கண்டும்காணாமல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். எங்கள் வீட்டை சுற்றி வளைத்திருக்கிற ரவுடிகளுக்கு என்னதான் வேண்டுமென்றும் தெரியவில்லை. வீட்டின் வாசலருகே வந்தாலோ அல்லது என்ன? ஏது? என்று விசாரித்தாலோ, ஆயுதங்களால் எங்களைத் தாக்கிவிடுவார்களோ என்கிற அச்சமிருந்தது. அதனால் வெளியே செல்லமுடியாமல் உள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் கொள்ளையர்கள் என்பதும், அதிலும் மிக வித்தியாசமான கொள்ளையர்கள்… Continue reading வடக்குப்பட்டி ராமசாமியும், வடகொரியப்போரும்… (சிறுகதை மாதிரி)
Author: chinthanep
ஆப்கன் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' (பகுதி-1)
பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசியும் எழுதியும் வந்த பாகிஸ்தானின் 15 வயது 'மலாலா'வின் மீது, மத அடிப்படைவாத தாலிபான்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம்... யார் இந்த தாலிபான்கள்? ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்? அவர்களுக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்துவந்திருக்கிறார்கள்? என்பதையெல்லாம் அறிந்துகொண்டால், மலாலாவின் இந்த நிலைக்கும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டுப் பெண்கள் சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சனைகளின் வேர்கள் எவை என்றும் நாம் புரிந்துகொள்ளமுடியும்... ஆப்கானின் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' என்கிற பெண்ணின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு சில பகுதிகளை… Continue reading ஆப்கன் மக்கள் போராளி 'மலாலாய் சோயா' (பகுதி-1)
ஆப்பிரிக்காவின் 'சே' – தாமஸ் சங்கரா (Burkina Faso Film)
மனித இனம் இன்று பல இனங்களாகவும், நாடுகளாகவும் மற்றும் இன்னபிற குழுக்களாகவும் பிரிந்து கிடக்கிறது... இப்படி பல தேசங்களை உருவாக்கி எல்லைக் கோடுகளுக்குள் புகுந்துகொண்டிருக்கும் மனித இனம், முதன்முதலில் தோன்றி வளர்ந்த பூர்வீக பூமியாக இன்றளவும் கருதப்படுவது ஆப்பிரிக்க மண்ணைத்தான்... அந்த ஆப்பிரிக்க மண்ணின் தேசங்கள், பல நூற்றாண்டுகளாக காலனிய நாடுகளாக அடிமைப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன... பிரெஞ்சு, பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், போர்ச்சுகல், ஜெர்மனி என ஆப்பிரிக்காவை ஆண்டு அடிமைப்படுத்தி சுரண்டிக்கொழுத்த மேற்குலக நாடுகளின் எண்ணிக்கை அதிகம்...… Continue reading ஆப்பிரிக்காவின் 'சே' – தாமஸ் சங்கரா (Burkina Faso Film)
சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்…
ஊடகங்கள் நமக்குச்சொல்லிய செய்திகளை விடவும், சொல்லாமல் மறைத்த/மறந்த செய்திகள்தான் அதிக அளவில் அதிர்ச்சி தருவதாக இருக்கும். அதில் ஒன்றுதான் உலகம் முழுவதுமுள்ள கைதிகளின் எண்ணிக்கை. உலகிலேயே அதிகளவிலான மக்களை கைதிகளாக சிறைபிடிக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்காதான். இன்றைய தேதியில், உலகின் 25 சதவீதமான கைதிகள் அமெரிக்க சிறைகளில்தான் இருக்கிறார்கள். குழப்பங்களும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டுவரும் அடர்ந்த ஆப்பிரிக்க நாடுகளைவிடவும், பலமடங்கு சிறைக்கைதிகள் அமெரிக்காவில்தான் அதிகம். ஒரு புறம் மனித உரிமை குறித்து உலகெங்கிலும் பேசிவருகிற அதே அமெரிக்காவில்தான்… Continue reading சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்…
கார்ப்பரேட் கதை : "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து"
இலாபம் வந்தபோதெல்லாம் அதனை தாமே வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக காலம்தள்ளிய அவ்வங்கியின் முதலாளிகள், 2008 இல் துவங்கிய நிதி நெருக்கடியின் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களை காப்பாற்ற வேண்டுமென்றார்கள். அரசாங்கமும் மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு வங்கியின் 84 சதவீத பங்குகளை வாங்கியது. இந்நெருக்கடியினால், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 34,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து". ஆனால் இலாபம் வருகிறதோ இல்லையோ, தங்களுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள விரும்பாத முதலாளிகள் எல்லா காலகட்டத்திலும் தங்களுடைய போனஸ், ஊதிய உயர்வு… Continue reading கார்ப்பரேட் கதை : "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து"
பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…. (Bread and Tulips – Italian Film)
1994 இல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பெரும்பான்மையினரான ஹூட்டு இனத்தினர் சிறுபான்மை டூட்சி மக்களை இனப்படுகொலை செய்த நிகழ்வினை சொல்லும் திரைப்படமான "Shaking hands with the Devil" இல் ஒரு காட்சியில் ஹூட்டு இனத்தை சார்ந்த பெண் பிரதமரிடம் ஐ.நா. தூதுவர் கேட்பார், "நீங்க ஹூட்டுவா? டூட்சியா?" "நான் ஹூட்டு தான்" - அப்பெண் "நெனைச்சேன்" - தூதுவர் "ஹூட்டுவாக இருந்தா என்ன? டூட்சியாக இருந்தா என்ன? பெண்ணாக இருக்கிறேனே! அதைவிடவா பெரிய கொடுமை இருந்துவிடப்போகிறது?… Continue reading பெண்களுக்கும் ஆசைகளுண்டு… அதன்படி வாழ உரிமையுமுண்டு…. (Bread and Tulips – Italian Film)
வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)
வீட்டிலிருந்து வெளியே செல்ல கிளம்பிய வாசுகி, எதிர்வீட்டைக்கண்டதும் நிமிடமொன்று நின்று அவ்வீட்டையே உற்று நோக்கினாள். காந்தி நகரிலேயே முதன்முதலாக தொலைக்காட்சிப்பெட்டி வாங்கிய வீடுதான் அது. அதற்காக இந்த ஊரே, அவ்வீட்டை 'டிவி காரங்க வீடு' என்றும், அவ்வீட்டிலுள்ள மனிதர்களை 'டிவிகாரரு' 'டிவி காரம்மா' 'டிவி காரம்மா பொண்ணு' என்று அழைத்துவருகிறது. 'டிவி பெட்டி கருப்பா? சிவப்பா? வட்டமா? சதுரமா?' என்றெல்லாம் ஆயிரம் குழப்பங்களோடு அவ்வீட்டிற்கு நுழைந்தபோதெல்லாம் கடுஞ்சொற்களின் மூலமாக வாசலோடு விரட்டப்பட்ட நிகழ்வுகளை நினைத்துப்பார்க்காமல் வாசலைத்தாண்டியதில்லை வாசுகி.… Continue reading வார்டு கவுன்சிலர் வண்டுமுருகன்… (சிறுகதை)
கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…
கடந்த ஒரு வாரமாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு குறித்தே உலக ஊடகங்களெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, மற்றுமொரு மனிதரின் மறைவு மறைக்கப்பட்டேவிட்டது. அவர்தான் 'டென்னிஸ் ரிச்சி'. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, தொலைபேசியைக்கண்டுபிடித்த அலக்சாண்டர் கிரகாம்பல் உருவாக்கிய 'பெல் லாப்ஸ்' என்கிற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு வேலைபார்த்தபோது கணினித்துறைக்காக ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றவர். 1973 ஆம் ஆண்டு வரை மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருந்த கணினித்துறை, "சி" என்கிற கணினிக்கான நிரல்மொழியின் வருகைக்குப்பின்னர்தான்… Continue reading கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…
நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)
நான் நின்றுகொண்டிருக்கும் இத்தெருவிற்கு வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டது. ஓசி சோறும், வேலைசெய்யாமலெடுத்த ஓய்வும் என்தொப்பையினை ஒரு சுற்று பெருக்க வைத்திருப்பது உண்மைதான். "வாங்க வெளிய போகலாம்" என்று இழுத்துக்கொண்டே தெருவினைக்கடந்தும் என்கையை விடாமல் பிடித்துக்கொண்டு வந்தான், எனக்கு இருப்பிடம் கொடுத்த ராமு. "நாம எங்கப்பா போறோம்?" என்கிற கேள்வியை வழிநெடுக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். சிரிப்பைத்தவிர வேறெதுவும் பதிலாகத்தரவில்லை அவன். ஒவ்வொரு தெருவைத்தாண்டுகிறபோதும் மேலும் சிலர் எங்களுடன் சேர்ந்துநடக்கத்துவங்கியது எனது குழப்பத்தை கூட்டத்தான் செய்தது.… Continue reading நான் அவனில்லை… (புனைவுச்சிறுகதை)
வியாபாரமாகும் உயர்கல்வி -1
மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். நெருப்பினை உருவாக்குவது எப்படி என்று கண்டறிந்தவன் அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுத்த காலம் முதலே கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற தனியார்மயமும் வணிகமயமாக்கலும், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும், எதனை கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் 'பணமே' தீர்மானிக்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உயர்கல்விக்கான "மொத்த சேர்க்கை விகிதம்" (Gross Enrolment Ratio ) உலக சராசரியை விடவும் பாதிக்கும் குறைவாகத்தான் இந்தியாவில்… Continue reading வியாபாரமாகும் உயர்கல்வி -1