ஊழல் என்பது என்ன? அதன் மூலவேர்கள் எவை? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலைத்தேடாமல், அல்லது நமக்கு வசதியான பதிலை வைத்துக்கொண்டு, ஊழலை ஒழிப்போம் என்று கிளம்பியிருக்கிறார்கள். வருடாவருடம் நாட்டின் பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி, இரண்டு லட்சம் கோடி என்று 'ஏழை' கார்பொரேட் நிறுவனங்களை வைத்திருக்கும் அம்பானிகளுக்கும் கும்பானிகளுக்கும் சலுகை அளிக்கப்படுகிறதே! அதற்கு நன்றிக்கடனாக, ஒவ்வொரு மந்திரிகள் நடத்தும் நிறுவனங்களிலும் ஒரு 1000 கோடி அம்பானி முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம் (கலைஞர் தொலைகாட்சி விவகாரத்திலும் இது நடந்ததுதான்).… Continue reading அன்னா ஒழித்துவிட்ட ஊழல்….
Category: கட்டுரை
நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'
நார்வே நேரப்படி மாலை சுமார் 3.22 அளவில் தலைநகரான ஓஸ்லோவில் எட்டு பேரின் உயிரைக்குடித்த குண்டுவெடிப்புச்சம்பவம் நிகழ்ந்தது. "நார்வேயில் குண்டுவெடிப்பா?" என உலகமே அதிர்ச்சியாக கேள்விஎழுப்பியதற்குக்காரணம் இரண்டாம் உலகப்போருக்குப்பினால் எவ்வித குண்டுவெடிப்பு சப்தமும் கேட்டதில்லை நார்வேயில். அதிர்ச்சியின் வீரியம் குறைவதற்கு முன்னரே அடுத்த இரண்டு மணிநேரத்தில் நார்வேயை ஆளும் தொழிலாளர்கட்சியின் இளைஞர்பிரிவு நடத்திக்கொண்டிருந்த முகாமில், இராணுவ உடையணிந்தொருவன் கண்மூடித்தனமாக சுட்டு 70க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்கிறான். இப்படுகொலை நடந்தது தலைநகர் ஓஸ்லோவுக்கருகில் இருக்கும் சிறிய தீவான உட்டோயாவில்.… Continue reading நார்வேயின் நரேந்திரமோடி 'ப்ரேவிக்'
இணையத்தில் விவாதம் செய்யலாமா
ஒரு குறிப்பிட்ட தலைப்பினில் ஒருவருக்கொருவர் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்கிற விவாதமானது காலம் காலமாக இருந்துவருவதுதான். ஆனால் அது என்றுமே ஒரு மிகக்குறுகிய வட்டத்துக்குள்ளேதான் இருந்துவந்திருக்கிறது. இதற்கு மாறாக அதிகப்படியான மக்களிடம் செய்திகளை கொண்டுசெல்லும் ஊடகங்களில் ஒருவழித்தொடர்புதான் சாத்தியமாகிறது. அது வானொலியாகட்டும், தொலைக்காட்சியாகட்டும், அச்சில் வெளியாகிற எழுத்துக்களாகட்டும், தலைவர்களின் மேடைப்பேச்சாகட்டும் - இவை அனைத்துமே மிகக்குறைந்த அளவிலேயே விவாதத்திற்கு வழிவகுத்தன. தவறான தகவல்களுடனும், தனிப்பட்டமுறையில் நமக்கு ஏற்பில்லாத கருத்துக்களுடனும் வெளியாகும் கட்டுரைகளை படிக்கும்போதெல்லாம் பெரும்பாலும் அந்த பத்திரிக்கையை மூடிவைத்துவிட்டு… Continue reading இணையத்தில் விவாதம் செய்யலாமா
தனி தெரு கேட்டு போராட்டம்…
நான் பிறந்தது முதல் வசித்து வருவது நேதாஜி நகரின் இரண்டாவது குறுக்குத்தெருவில். இரண்டாவது குறுக்குத்தெரு என்பது இரண்டாவது தெருவையும் மூன்றாவது தெருவையும் இணைக்கிற ஒரு சிறிய தெருவாகும். "டேய் இதெல்லாம் ஒரு தெருவா? குறுக்கு சந்தையெல்லாம் தெரு கிறுன்னு சொல்லிக்கிட்டு அலையாதீங்கடா......" என்பன போன்ற வார்த்தைகளை கேட்டாலே கோபம் பொத்துக்கொண்டு வரும் எனக்கு. ஆனாலும் 2 ஆவது தெரு பசங்களும் சரி, 3 ஆவது தெரு பசங்களும் சரி எங்களை இப்படி கிண்டல் செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.… Continue reading தனி தெரு கேட்டு போராட்டம்…