கட்டுரை, குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

வானவில் – நூல் அறிமுகம்

சிறுவர் இலக்கியத்தில் மிகமிக முக்கியமானதும் அவசியமானதுமாக இருப்பது சிறுவர் பாடல்கள் என்பேன். கதைகளைக் கேட்பதற்கு முன்பே, பாடல்கள் வழியாக பலவற்றைத் தெரிந்துகொள்ளவே குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது துவங்கி, பள்ளிக்கு செல்லும் வயதுவரையிலும் அக்குழந்தைக்கு ஏதாவது பாடலை வீட்டிலிருப்பவர்கள் பாடிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் அது இப்போதெல்லாம் மிகமிகக் குறைந்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த தொலைக்காட்சிகளும் யூட்யூப்களும் வந்துவிட்ட காலத்தில், ரைம்ஸ் எல்லாம் அதன்வழியாகத் தான் பாடப்படுகின்றன. அப்பாடல்களில் அனிமேசனுக்கும் அதில் காண்பிக்கப்படும் பொருட்களுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவமெல்லாம்… Continue reading வானவில் – நூல் அறிமுகம்

கட்டுரை, நூல் அறிமுகம்

வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்

இந்நூலைப் படித்துமுடித்ததில் இருந்தே வருத்தமும் கோபமும் குழப்பமும் ஆத்திரமும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. அந்த 180 பக்க நூலின் மொத்த சாராம்சமே, “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. இன்றைய நவீன மருத்துவம் மட்டும் தான் முட்டாள்தனம்” என்று சொல்வது தான். அதாவது வீட்டிலேயே பிரசவம் பார்க்கவேண்டும் என்றும், மருத்துவமனைகளில் இருக்கிற பிரசவ வார்டுகள் மொத்தத்தையும் இடித்துத் தள்ளிவிட்டு, பிரசவம் பார்க்கிற மருத்துவர்கள் அனைவரையும் வேறெதாவது வேலைக்கு அனுப்பவேண்டும் என்பது தான் அந்த நூலின் விருப்பமும் ஆசையும் தீர்மானமும்.… Continue reading வீட்டுப் பிரசவம் எளிது – நூல் அறிமுகம்

கட்டுரை

அசாருதீனுக்கு என்ன ஆனது?

'அசாருதீனின் ஊழல் காலத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை மீட்டவர் சச்சின்' என்று சங்கிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது முற்றிலும் தொடர்பற்ற ஒரு விவாதம் தான் என்றாலும், ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2000 ஆம் ஆண்டில் அசாருதீன் மீது பணம் வாங்கிக்கொண்டு மேட்ச் ஃபிக்சிங் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ யும் ஐசிசியும் ஆயுட்காலத் தடைவிதித்தன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் அசாருதீன். அந்த வழக்கு சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்று… Continue reading அசாருதீனுக்கு என்ன ஆனது?

கட்டுரை

தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

சச்சின் டெண்டுல்கரெல்லாம் தேசபக்தியைப் பற்றியும், அடுத்த நாட்டுப் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்கக் கூடாதுன்னு சொல்வதெல்லாம் வேடிக்கையிலும் வேடிக்கை. உலகிலேயே அதிகமான நாடுகளின் பிரச்சனைகளில் ஒட்டுக்கேட்பதையும் மூக்கைநுழைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிற அமைப்புகள் யாரென்றால், பல வலதுசாரி இந்துத்துவ அமைப்புகள் தான். ஐரோப்பாவில் இருக்கிற ஒருநாட்டில் உளவுபார்ப்பதற்காகவே, ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே அத்தகைய இந்துத்துவா அமைப்பொன்றின் ஐரோப்பிய பிரிவில் வேலைபார்க்கும் ஒருவனை தற்செயலாக சந்திக்க நேரிட்டது. அவனுடன் சில மாதங்கள் தொடர்ந்து உரையாடியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளித்தன. இங்கிலாந்தில் வாழும்… Continue reading தேவையில்லாமல் மூக்கைநுழைக்கும் போட்டி வைத்தால் முதல்பரிசு இந்துத்துவவாதிகளுக்கே

கட்டுரை

பாஜகவின் உண்மை முகம்

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும். பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும், அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது. 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், அரசு… Continue reading பாஜகவின் உண்மை முகம்

கட்டுரை, நூல் அறிமுகம்

‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))

மக்களின் வாழ்க்கையை உள்வாங்கி, ஒவ்வொரு கலைஞனும் தன் அளவிலான எதிர்வினையை கலையாகவும், இலக்கியமாகவும், படைப்புக்களாகவும் வெளிப்படுத்துகிறான். ரசிகர், விமர்சகர் என ஒவ்வொருவரிடமும் அந்த கலைப்படைப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விமர்சகர்களும், ரசிகர்களும் தங்கள் அனுபவங்களோடு படைப்பை உரசிப் பார்த்தேன் உள்வாங்குகின்றனர். சினிமாக்களின் ஊடாக பாலஸ்தீனிய மக்கள் போராட்டங்களை தரிசித்து நமக்கு புத்தகமாகக் கொடுத்திருக்கிறார், இ.பா.சிந்தன். சென்னையில் பிறந்து படித்து வளர்ந்து தற்போது பெல்ஜியம் நாட்டில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக உள்ள அவர், ஏற்கனவே அரசியல் பேசும் அயல் சினிமா… Continue reading ‘பாலஸ்தீனம்’ நூல் விமர்சனம் – தோழர் ஜி.ஆர். (மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்))

கட்டுரை

சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்…

ஊடகங்கள் நமக்குச்சொல்லிய செய்திகளை விடவும், சொல்லாமல் மறைத்த/மறந்த செய்திகள்தான் அதிக அளவில் அதிர்ச்சி தருவதாக இருக்கும். அதில் ஒன்றுதான் உலகம் முழுவதுமுள்ள கைதிகளின் எண்ணிக்கை. உலகிலேயே அதிகளவிலான மக்களை கைதிகளாக சிறைபிடிக்கும் நாடு எது தெரியுமா? அமெரிக்காதான். இன்றைய தேதியில், உலகின் 25 சதவீதமான கைதிகள் அமெரிக்க சிறைகளில்தான் இருக்கிறார்கள். குழப்பங்களும் கொடூரங்களும் நிகழ்த்தப்பட்டுவரும் அடர்ந்த ஆப்பிரிக்க நாடுகளைவிடவும், பலமடங்கு சிறைக்கைதிகள் அமெரிக்காவில்தான் அதிகம். ஒரு புறம் மனித உரிமை குறித்து உலகெங்கிலும் பேசிவருகிற அதே அமெரிக்காவில்தான்… Continue reading சிறைகளும் பணம் நிரப்பும் தொழில்தான், முதலாளிகளின் உலகில்…

கட்டுரை

கார்ப்பரேட் கதை : "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து"

இலாபம் வந்தபோதெல்லாம் அதனை தாமே வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக காலம்தள்ளிய அவ்வங்கியின் முதலாளிகள், 2008 இல் துவங்கிய நிதி நெருக்கடியின் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களை காப்பாற்ற வேண்டுமென்றார்கள். அரசாங்கமும் மக்களின் வரிப்பணத்தைக்கொண்டு வங்கியின் 84 சதவீத பங்குகளை வாங்கியது. இந்நெருக்கடியினால், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 34,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து". ஆனால் இலாபம் வருகிறதோ இல்லையோ, தங்களுடைய வருமானத்தை குறைத்துக்கொள்ள விரும்பாத முதலாளிகள் எல்லா காலகட்டத்திலும் தங்களுடைய போனஸ், ஊதிய உயர்வு… Continue reading கார்ப்பரேட் கதை : "ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து"

கட்டுரை

கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…

கடந்த ஒரு வாரமாக ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவு குறித்தே உலக ஊடகங்களெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, மற்றுமொரு மனிதரின் மறைவு மறைக்கப்பட்டேவிட்டது. அவர்தான் 'டென்னிஸ் ரிச்சி'. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து,  தொலைபேசியைக்கண்டுபிடித்த அலக்சாண்டர் கிரகாம்பல் உருவாக்கிய 'பெல் லாப்ஸ்' என்கிற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.  அங்கு வேலைபார்த்தபோது கணினித்துறைக்காக ஏராளமான ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றியும் பெற்றவர்.   1973 ஆம் ஆண்டு வரை மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருந்த கணினித்துறை, "சி" என்கிற கணினிக்கான நிரல்மொழியின் வருகைக்குப்பின்னர்தான்… Continue reading கணினி மொழிகளின் தந்தை டென்னிஸ் ரிச்சி மறைவு…

கட்டுரை

வியாபாரமாகும் உயர்கல்வி -1

மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். நெருப்பினை உருவாக்குவது எப்படி என்று கண்டறிந்தவன் அடுத்தவனுக்கு சொல்லிக்கொடுத்த காலம் முதலே கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற தனியார்மயமும் வணிகமயமாக்கலும், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும், எதனை கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் 'பணமே' தீர்மானிக்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உயர்கல்விக்கான "மொத்த சேர்க்கை விகிதம்" (Gross Enrolment Ratio ) உலக சராசரியை விடவும் பாதிக்கும் குறைவாகத்தான் இந்தியாவில்… Continue reading வியாபாரமாகும் உயர்கல்வி -1