கட்டுரை, குழந்தைகள் இலக்கியம்

சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…

சிறுவர் இலக்கியத்தின் மிகமுக்கியமான காலகட்டத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். சிறுவர் இலக்கியத்தில் உலகளாவிய சாதனையை நிகழ்த்திவிட்டோம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அதனை நிகழ்த்துவதற்கான சூழலை உருவாக்குவதற்கான கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்சூழலில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். சிறுவர் இலக்கியத்திற்காக ஏதோவொரு வகையில் உழைக்கும் ஏறத்தாழ முன்னூறு பேர் ஜூம் வழியாக ஒரே நேரத்தில் இணைந்து உருவாக்கிய சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தை ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கலாம். அதே போல, சிறுவர் இலக்கியத்தில் ஆண்களின்… Continue reading சிறுவர் இலக்கியத்தில் முன்னேறுவோம் ஆனால் கவனத்துடன்…

கட்டுரை

நிழல்இராணுவங்கள் – தமுஎகச விருது 2019

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் நூலுக்கு தமுஎகச வழங்கியிருக்கிறது. இந்த விருது எனக்கு மிகமிக முக்கியமான விருது. ஏனெனில் இதற்கு முன்பு எழுதியதற்காக எந்தவொரு விருதையும் நான் வாங்கியதில்லை. ஒரு வெங்கலக்கிண்ணம் கூட பரிசாகப் பெற்றதில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் கூட, பேச்சுப்போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஆனால் கட்டுரை எழுதும் போட்டிகள் எதிலுமே கலந்துகொண்டதாக நினைவு இல்லை. அதற்கு மிக முக்கியமான ஒரே காரணம் என்னவென்றால், என்னுடைய கையெழுத்து மிக மோசமாக இருக்கும். கட்டுரை… Continue reading நிழல்இராணுவங்கள் – தமுஎகச விருது 2019

கட்டுரை

தீர்த்தமலை தகவல் தொழில்நுட்ப அறிவு மையம்

அது 2008 ஆம் ஆண்டு. அப்போது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் அரூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார் சிபிஎம் ஐச் சேர்ந்த தோழர் டில்லிபாபு. அந்த சட்டமன்ற எல்லைக்குள் பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் தீர்த்தமலையில் ஒரு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தைத் துவங்கும் திட்டத்தை அவரும் அவர் சார்ந்திருக்கிற கட்சியின் உதவியோடும் ஒருசில இயக்கங்களின் உதவியோடும் தயாரிக்கப்பட்டது. திட்டம் தயாராகிவிட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த இடம் வேண்டுமே. தீர்த்தமலையில் நூல்களே இல்லாமல் மூடிக்கிடந்த ஒரு பழைய… Continue reading தீர்த்தமலை தகவல் தொழில்நுட்ப அறிவு மையம்

கட்டுரை

மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

மேற்குவங்கத்தில் சிபிம் ஆட்சியில் இருந்தபோது நந்திகிராமில் மக்களுக்கு எதிராக காவல்துறை அட்டூழியம் நிகழ்த்தியதாக மாநிலம் முழுவதும் செய்திபரப்பி ஆட்சிக்கு வந்தவர் மம்தா. அன்றைய சிபிம் ஆட்சிக்கு எதிராக இந்த ஒரேயொரு குற்றச்சாட்டை மட்டுமே மக்கள் முன்பு வைத்து, ஓட்டுக்களாக மாற்றி மம்தா முதல்வரானார். நந்திகிராமில் சிபிம் க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்த சுவேந்து அதிகாரி என்பவர், பின்னர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இத்தனை வருடங்களாக மம்தாவின் கட்சியில் இருந்த அவர், தற்போது… Continue reading மேற்குவங்கம்… நந்திகிராம்… மம்தா…

கட்டுரை

முஸ்லிம்களுக்கு வீடு கிடையாதா?

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவர் புதிதாக ஒரு அப்பார்ட்மெண்டிற்கு குடிபோன செய்தி கேட்டு அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். “வீடு என்ன விலைடா?” என்று கேட்டேன். “அறுபது இலட்சம் மச்சி” என்றான். “காசு குடுத்து வாங்கினியா?” எனக் கேட்டேன். “அவ்ளோ காசு என்கிட்ட ஏதுடா. எல்லாம் லோன் தான்” என்றான். சோஃபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, வீட்டைச் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன். சுவரெல்லாம் வெடிப்பு விழுந்ததைக் காண முடிந்தது. “சுத்திக் காட்டமாட்டியா?” என்று கேட்டேன்.  … Continue reading முஸ்லிம்களுக்கு வீடு கிடையாதா?

கட்டுரை, குழந்தைகள் இலக்கியம், நூல் அறிமுகம்

கயிறு – நூல் அறிமுகம்

12 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்காக “கயிறு” என்கிற கதை நூலை எழுதியிருக்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். தமிழில் இளையோருக்கான நூல்களை வெளியிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் துவங்கப்பட்டிருக்கிற “ஓங்கில் கூட்டம்” என்கிற அமைப்பு, இந்நூலை வெளியிட்டிருக்கிறது.  கதையைப் பற்றி ஏதாவது ஒரேயொரு வரியை எழுதினால் கூட கதையைச் சொல்வதாகிவிடும். அதனால் அதனைச் சொல்லாமல் தாண்டிச் சென்று இந்நூலை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறேன். 12 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கான கதைகளில் அதிகமான ஃபேன்டசி இருக்கும். மனிதர்களின் உறவு சார்ந்த… Continue reading கயிறு – நூல் அறிமுகம்

கட்டுரை, சினிமா அறிமுகம்

மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

சமீபத்தில் “மால்கம் & மேரி” என்றொரு திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் மொத்தமே இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் தான். இருவரின் முகத்தைத் தவிர வேறு யாரையும் காட்டமாட்டார்கள். வேறு யாரின் குரலும் ஒலிக்காது. படம் மொத்தமும் ஒரே வீட்டிற்குள் ஒரே இரவில் தான் நடக்கும். ஒருவேளை அதுவொரு குறும்படமோ என்று நினைத்துவிடாதீர்கள். முழுநீளத் திரைப்படம் தான். அந்த திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? கருப்பினத்தைச் சேர்ந்த மால்கம் என்பவர் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பின்பு ஒரு திரைப்படத்தை இயக்குகிறார்.… Continue reading மால்கம் & மேரி – சினிமா அறிமுகம்

கட்டுரை

தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

பாஜக ஒவ்வொரு மாநிலத் தேர்தலுக்கும் விதவிதமான வியூகங்களை வகுத்து வைத்திருக்கும். ஒரேமாதிரியான திட்டத்தோடோ, ஒரேமாதிரியான வியூகத்துடனோ பாஜக தேர்தலை எதிர்கொள்வதே இல்லை. ஒரே நாடு, ஒரே ரோடு என்றெல்லாம் தேசம் முழுவதும் பேசுவது போன்று தெரிந்தாலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தனி மாநிலமும் தனி நாடும் கேட்கிற கட்சிகளோடு கைகோர்த்துக்கொண்டு ஒரே நாடு கோரிக்கையை பேசாமல் இருக்கும். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடித்தே கொல்லும் உத்தரப்பிரதேசத்தில் அப்படியாக கொலை செய்பவர்களின் கருத்தியலை ஆதரிக்கும் அதே பாஜக, கேரளாவுக்கு வந்தால்… Continue reading தமிழகத்தில் பாஜகவின் திட்டம் என்னவாக இருக்கமுடியும்?

கட்டுரை

ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிற அதேவேளையில் கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் இம்முறையும் பாஜக சார்பாக பொன் இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். அவர் வென்றால் அமைச்சராவார், அவர் வென்றால் பாலம் கட்டுவார் என்றெல்லாம் பாஜகவினர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். சில உண்மைத் தகவல்களை நாம் இந்த நேரத்தில் சரிபார்த்துக்கொள்வது நல்லது. ஒரு பாராளுமன்ற எம்பியின் மிக முக்கியமான பணி என்ன தெரியுமா? சாலையில் சில விளக்குகளை அமைப்பதோ, சில தெருக்களுக்கு சாலை போடுவதோ அல்ல. நம்முடைய… Continue reading ஒரு பாராளுமன்ற எம்பியின் பணியென்ன பொன்ராகிருஷ்ணன் அவர்களே?

கட்டுரை, நூல் அறிமுகம்

பச்சை வைரம் – நூல் அறிமுகம்

பாரதி புத்தகாலயத்தினுடைய புக்ஸ் ஃபார் சில்ட்ரன் பதிப்பகத்துக்கு நாமெல்லாம் பெரியளவுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். சமூக அக்கறை மிகுந்த சிறுவர் கதைளை வெளியிடுவதில் தமிழ்ச்சமூகத்தில் அவர்களுடைய பங்கு மிகமிக முக்கியமானதாகும். இந்த நூலின் துவக்கத்திலேயே இது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நூல் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அது ரொம்ப ரொம்ப முக்கியமான வயசு என்று நினைக்கிறேன். அதற்குக் கீழுள்ள வயதுடைய குழந்தைகளுக்கு ஃபாண்டசியா நிறைய கதைகளை சொல்கிறோம். குறிப்பாக மனிதர்களுடைய தன்மைகளை விலங்குகளின் மீது ஏற்றி கதை சொல்வது 12 வயதுக்கு… Continue reading பச்சை வைரம் – நூல் அறிமுகம்