1973 ஆம் ஆண்டு வரை மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருந்த கணினித்துறை, “சி” என்கிற கணினிக்கான நிரல்மொழியின் வருகைக்குப்பின்னர்தான் அதிவேக வளர்ச்சியடைந்தது எனலாம்.
இன்றைக்கு மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற லினக்ஸ் இயக்கமுறையின் (ஆபெரடிங் சிஸ்டம்) ஆதியான யுனிக்ஸ் இயக்கமுறையினையும் கென் தாம்சனுடன் இணைந்து உருவாக்கியர் டென்னிஸ் ரிச்சி. யுனிக்சை உருவாக்கியவராக இருப்பினும், கட்டற்ற மென்பொருள் (Free Software) உருவாக்கத்தில் அவர் பெரும்பங்கு வகிக்கவில்லை. தன்னுடைய ஒரு நேர்காணலில், லினக்சை தான் பயன்படுத்தியதே இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். கட்டற்ற மென்பொருள் உருவாக்கத்திலிருந்து விலகியே இருந்திருக்கிறார் என்பது வருந்தத்தக்க வரலாறுதான்.
அவரது சாதனைகளைப்பாராட்டி கணிணித்துறையின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் ட்யூரிங் விருது 1983 இல் அவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த 8 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 70 ஆவது வயதில் காலமானார் ரிச்சி.
மென்பொருள் வியாபாரிகளான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோரை தூக்கிவைத்துக்கொண்டாடும் நாம், டென்னிஸ் ரிச்சியைப்போன்ற உண்மையான அறிவியலாளர்களை நினைவுகூராமல் விடுவது சரியாகாது.
//மென்பொருள் வியாபாரிகளான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோரை தூக்கிவைத்துக்கொண்டாடும் நாம், டென்னிஸ் ரிச்சியைப்போன்ற உண்மையான அறிவியலாளர்களை நினைவுகூராமல் விடுவது சரியாகாது.//You have the reason for your stated problem in itself. Gates, Jobs are all Businessmen who were also techies while Dennis Ritchie was just a techie, not a businessman.RIP Ritchie.