உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை. அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் தூக்கலாம். ஆக கைது, விசாரணை, வழக்கு, நீதிமன்றம், தீர்ப்பு, நீதி, நியாயம் எதுவுமே தேவைப்படாமல் அதிகாரம் படைத்த எவரும் துப்பாக்கியை எடுத்து அவரவருக்கான (அ)நியாயத்தைப்… Continue reading அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்
Month: May 2022
பேரறிவாளன் விடுதலை ❤️❤️❤️
31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு இன்றைக்கு முழுமையாக விடுதலையாகி இருக்கிறார் பேரறிவாளன். இந்த 31 ஆண்டுகால வரலாற்றை உற்றுநோக்கினால் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் அறம்சார்ந்தும் சமூகமாக நாம் எங்கெல்லாம் நம்மை சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவே இன்னொரு பேரறிவாளனை இத்தனை ஆண்டுகள் சிறையில் நீண்டகாலமாக உள்ளே தள்ளுவதையும், அவரை மீட்டுக்கொண்டுவருவதற்கு இன்னொரு நீண்டநெடிய போராட்டத்தை மேற்கொள்ளவேண்டி இருப்பதையும் தடுக்கும். பேரறிவாளனின் இடத்தில் வேறொரு மெகா கோடீஸ்வரரின் மகன் கைது செய்யப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நிச்சயமாக… Continue reading பேரறிவாளன் விடுதலை ❤️❤️❤️
‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை
கல்லூரிக் காலத்தில் ஒரு கவிதை நோட்டுப் புத்தகம் வைத்திருந்தேன். எப்போது எழுத வேண்டும் என்று தோன்றினாலும் அதில் எழுதிவிடுவேன். அந்தக் கவிதைகளெல்லாம் பலவிதங்களிலும் பலபேருக்கும் பலகாலகட்டத்தில் பயன்பட்டிருக்கின்றன. இணையத்தில் பிளாக் என்கிற ஒன்று வந்தபிறகு, நோட்டுப் புத்தகத்தில் எழுதுவதை பிளாகில் எழுதத் துவங்கினேன். கவிதைகளைத் தாண்டி கதைகளையும் அவ்வப்போது எழுதிப் பார்த்தேன். பின்னர் அதுவே மெல்ல திரைப்படங்கள் குறித்து எழுத ஆரம்பித்தேன். அதிலும் அரசியல் திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து, அவை பேசும் அரசியலையும், அதற்குப் பின்னிருக்கும் வரலாற்று உண்மைகளையும்… Continue reading ‘உக்ரைனில் என்ன நடக்கிறது’ நூல் வெளியீடு – கடந்துவந்த பாதை
அல்நக்பா தினம் – 74 ஆண்டுகால கொடூரத்தின் நினைவுதினம்
1948 ஆம் ஆண்டு வரையிலும் பாலஸ்தீனம் என்கிற பெயரில் இருந்த தேசத்தை பாலஸ்தீன மக்களிடமே கேட்காமல், அமெரிக்காவும் பிரிட்டனும் மற்றும் இன்னபிற நாடுகளும் இணைந்து திருட்டுத்தனமாக ஐநா சபையில் சட்டமியற்றி, பாலஸ்தீனத்தைப் பாதியாகப் பிரித்து, ஒரு பாதியை யூதர்களுக்கு வழங்கிவிட்டது. அப்போது பாலஸ்தீன நிலத்தில் வாழ்ந்து வந்தவர்களில் 90% பாலஸ்தீனர்கள். அவர்களுக்கு 50% நிலம் தான் வழங்கப்பட்டது. ஆனால் வெறுமனே 10% யூதர்களுக்கு மீதமுள்ள 50% நிலத்தை வழங்கிவிட்டன சர்வதேச ரௌடி அரசுகள். அப்போது அமெரிக்காவின் மிரட்டலுக்கெல்லாம்… Continue reading அல்நக்பா தினம் – 74 ஆண்டுகால கொடூரத்தின் நினைவுதினம்
இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்
இனவெறியைத் தூண்டி உள்நாட்டுப் போரை நடத்தியது, அதற்கான செலவுக்கு மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியது, போதாக்குறைக்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கியது, அதற்கிடையிலும் கணக்கிலடங்கா ஊழல் செய்தது என இலங்கை ஆட்சியாளர்களின் கொடூரத் திமிர்த்தனத்தால் அம்மக்களின் வாழ்க்கையே இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதனால் ஆளும் அரசை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போராட்டம் வெல்ல வேண்டும் என்பதிலும், ஆள்பவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும் அவர்கள் விரட்டப்படுவதனாலேயே ஒட்டுமொத்தப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்பது மூடநம்பிக்கை… Continue reading இலங்கையும் பிலிப்பைன்சும்: இலங்கை மக்கள் கற்கவேண்டிய வரலாற்றுப்பாடம்